ஹிஸ்புல்லாவின் கோட்டையில் குண்டுவெடிப்பு - 20 பேர் மரணம், 200 பேர் காயம்
லெபனன் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப்பகுதியில் உள்ள பிர் அல் ஏபெத் என்னுமிடத்தில் ஷியா பிரிவு ஹிஸ்பொல்லா இயக்கத்தித்தின் அலுவலக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் அருகே நேற்று கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
மக்கள் நடமாட்டமுள்ள அதிகமுள்ள அப்பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த தாக்குதலுக்கு சிரியாவில் செயல்பட்டு வரும் ஒரு சன்னி போராளி இயக்கத்தினர் பொறுப்பேற்றுள்ளனர்.
லெபனின் பக்கத்து நாடான சிரியாவில் ஷியா பிரிவு அதிபரான ஆசாத்துக்கு எதிராக சன்னி பிரிவு போராளிகள் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சண்டையிட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக இந்த ஹிஸ்பொல்லா இயக்கத்தினர் வெளிப்படையாக சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிரியா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்பொல்லா இயக்கத்தலைவர் நஸ்ரல்லா கூறியுள்ளார்.
http://www.aljazeera.com/news/middleeast/2013/08/2013815152140188564.html
http://www.aljazeera.com/news/middleeast/2013/08/2013815152140188564.html

Post a Comment