நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு, பிரிட்டன் முஸ்லிம்கள் அதிருப்தி
குஜராத் முதல்வர், நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு, பிரிட்டன் முஸ்லிம் அமைப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை, பிரிட்டன் பார்லிமென்டில் பேச வருமாறு, அந்நாட்டின், தொழிலாளர் கட்சியின் தலைவர், பேரி கார்டினர் அழைப்பு விடுத்தார். இதேபோல், கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பிலும், மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இந்நிலையில், மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில், பிரிட்டன் முஸ்லிம் அமைப்பினர் அதிருப்தியில் உள்ளனர்.பிரிட்டன் முஸ்லிம் அமைப்பின் தலைவர், முனாப் ஜீனா, பிரிட்டன் வெளியுறவு, உள்துறை அமைச்சர்கள் மற்றும் கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சியின் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகையில், "" மோடிக்கு அழைப்பு விடுத்ததில் பிரிட்டன் முஸ்லிம்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என்றார்.

Post a Comment