Header Ads



மனைவியைக் கொன்று புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகர்

அமெரிக்காவின் மியாமி பகுதியில் வாழ்ந்து வந்த டெரெக் மெடினா (31), ஜென்னிபர் அல்போன்சோ (26) என்ற தம்பதியர் மூன்று வருட திருமண வாழ்க்கைக்குப்பின் விவாரத்துப் பெற்றனர். பின்னர் அவர்கள் இருவரும் மீண்டும் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

மெடினா ஒரு நடிகராகவும், எழுத்தாளராகவும் இருந்து வந்துள்ளார். ஒருவரைக் காப்பாற்றியது எப்படி, தொடர்புகள் மூலம் தொடரும் குடும்பம் மற்றும் திருமண சிக்கல்கள் போன்ற இணையதளப் புத்தகங்களை எழுதியுள்ளார்.

இவர்களுடன் ஜெனிபருக்கு அவரது முதல் திருமணத்தின் மூலம் பிறந்த 10 வயதான பெண் குழந்தை ஒன்றும் சேர்ந்து வாழ்ந்துவந்தது. இந்தநிலையில், நேற்று மெடினாவின் பேஸ்புக் பக்கத்தில் அவரது மனைவி ரத்தக்கறையுடன் அவர்களது சமையலறையில் இறந்து கிடப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அவரது பெயரையும் அருகில் குறிப்பிட்டிருந்தார்.

அவர் தன்னை அடித்துக் கொண்டேயிருந்ததால் ஆத்திரத்தில் தான் அவரைக் கொன்றுவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார். தான் சிறைக்குச் சென்றாலும், மரண தண்டனை பெற்றாலும் தான் செய்ததை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதன்பின் அவர் தானே சென்று காவல்துறையிடம் சரணடைந்து உள்ளார்.

அவர் வெளியிட்ட புகைப்படம் கொண்ட அவரது தகவல் பக்கம், ஐந்து மணி நேரம் கழித்து இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டது. வீட்டுப் பிரச்சினைகளால் மெடினா அவரது மனைவியை சுட்டுக் கொன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.