தலையில் தொப்பி அணிந்து பெருநாள் வாழ்த்து கூறிய பாரதீய ஜனதா கட்சி
தலையில் தொப்பி அணிந்து பா.ஜனதா முதல்– மந்திரி ரம்ஜான் வாழ்ந்து தெரிவித்தார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் முதல்– மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. நேற்று அங்கு ரம்ஜானையொட்டி தலைநகர் போபாலில் முஸ்லீம்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.
திடீர் என்று முதல்– மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலையில் குல்லா அணிந்து தொழுகை நடந்த இடத்துக்குச் சென்றார். முஸ்லிம்களுடன் கை குலுக்கி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். ஏராளமானோர் அவருடன் ஆர்வத்துடன் கை குலுக்கினார்கள்.
குஜராத் முதல்– மந்திரி நரேந்திரமோடி முஸ்லிம்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் தலையில் குல்லா அணியமாட்டார். ஆனால் சிவராஜ்சிங் சவுகான் குல்லா அணிந்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
நரேந்திர மோடி பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த அத்வானி கடந்த ஜூன் மாதம் நடந்த விழாவில் சிவராஜ்சிங் சவுகானை சிறப்பாக ஆட்சி நடத்துவதாக புகழ்ந்தார். நரேந்திர மோடியை மனதில் வைத்தே அவர் இவ்வாறு புகழ்ந்தார்.
இந்த நிலையில் சிவராஜ் சிங் சவுகான் ரம்ஜான் வாழ்த்து சொன்னது கட்சியினரிடையே வியப்பை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் இந்தி நடிகர் ரஸா முராத் பங்கேற்றார். அவர் கூறும்போது, முதல்–மந்திரி சிவராஜ்சிங் சவுகானிடம் இருந்து நரேந்திர மோடி நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். தலையில் குல்லா அணிவது எந்த மதத்தையும் பாதிக்காது என்றார்.
சமீபத்தில் சிவராஜ்சிங் சவுகான் ரம்ஜானையொட்டி இப்தார் விருந்து அளித்தார். அதிலும் அவர் தலையில் குல்லா அணிந்து பங்கேற்றார்.

Post a Comment