இலங்கையிலிருந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமாம்..!
பாகிஸ்தானில் பயிற்சி பெற்று, இலங்கை வழியாக தென்னிந்தியாவுக்குள் ஊடுறுவி பயங்கர செயல்களில் ஈடுபட 8 பாகிஸ்தான் ஆயுததாரிகள் திட்டமிட்டிருப்பதாக மகாராஷ்டிர பொலிஸார் எச்சரித்துள்ளனர். மத்திய உளவுப் பிரிவு தகவல்களை மேற்கோள் காட்டி இந்த எச்சரிக்கையை மகாராஷ்டிர பொலிஸ் விடுத்துள்ளது.
தற்போது பாகிஸ்தான் முகாமில் இதற்காக இந்த 8 பேருக்கும் தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த 8 ஆயுததாரிகள் ளில் 4 பேர் பஞ்சாபிகள் ஆவர். மற்றவர்கள் காஷ்மீரிகள் ஆவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எட்டு பேரையும் யாழ்ப்பாணம் அருகே கடல் பகுதியில் இறக்கி விட பாகிஸ்தான் ஆயுததாரிகள் திட்டமிட்டுள்ளனனராம். அதாவது எப்படி மும்பைக்கு கடல் மார்க்கமாக 10 ஆயுததாரிகள் ஊடுறுவினார்களோ அதுபோல.
இந்த ஆயுததாரிகள் ளின் தாக்குதல் இலக்கு மதுரை அல்லது மயிலாடுதுறை என்று கூறப்படுகிறது. இன்னும் சில மாதங்களுக்குள் இந்தத் தாக்குதல் நடைபெறலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தென் மாநிலங்கள் அனைத்துமே மிகுந்த உஷார் நிலையில் இருக்குமாறும் மத்திய உளவுப் பிரிவுகள் கேட்டுக் கொண்டுள்ளன.
கடந்த பெப்ரவரி 2ம் திகதி கொழும்பில் வைத்து 3 பாகிஸ்தானியர்கள் சிக்கினர். இவர்களை விசாரித்தபோது அடித்தி மும்பை, திருவனந்தபுரத்திற்கு இலங்கை கடவுச்சீட்டு மூலம் சென்றது தெரிய வந்தது.
இந்திய உளவுப் பிரிவுகள் மேலும் கூறுகையில், சிங்கள மீனவர்களின் ஒத்துழைப்புடன், தமிழகம் அல்லது கேரளாவுக்குள் ஊடுறுவ பாகிஸ்தான் ஆயுததாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த சதித் திட்டத்தை லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் வடிவமைத்துள்ளது.
இலங்கையை தங்களது சதித் திட்டத்தின் பாதையாக மாற்றி வருகின்றன பல்வேறு பாகிஸ்தான் அமைப்புகள். லஷ்கர் இ தொய்பா தவிர, பப்பர் கல்சா, ஜெய்ஸ் இ முகம்மது, ஜமாத் உத் தவா, அல் உமர் முஜாஹிதீன், ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவை இலங்கை வழியாக இந்தியாவைத் தாக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment