Header Ads



நாட்டை குழப்புவதற்கு ஒரு சில குழுக்கள் முயற்சி - இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

புத்திசாலித்தனமான இலங்கைப் பிரஜைகளை உருவாக்க வேண்டியது நிர்வாகிகளின் பொறுப்பு என முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவிக்கின்றார்.

பேருவளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என சிந்தித்து செயற்பட வேண்டும் எனன தெரிவித்த அவர், நாட்டை குழப்புவதற்கு ஒரு சில குழுக்கள் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இழப்புகள் ஏற்பட்டதும் அங்கவீனர்கள் உருவாக்கப்பட்டதும் போதும் எனக் குறிப்பிட்ட இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்,  அவ்வாறானா நிலைமை மீண்டும் ஏற்படாதவாறு நடந்துகொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் நாட்டிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் ''நான் முஸ்லிம் பிரதிநிதி, நான் சிங்கள பிரதிநிதி என சிந்தித்தால் என்ன நடக்கும்'' எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். nf

4 comments:

  1. முஸ்லிம் காங்கிரஸ் உட்பட இஸ்லாமிய அல்லது முஸ்லிம் என்று அடைமொழியிட்ட கட்சிகள் கலைக்கப்பட வேண்டும். எமது இஸ்லாமியக் கொள்கைகளையும் விழுமியங்களையும் விட்டுக் கொடுக்காமல் பெரும்பான்மை சிறுபான்மை என்ற பேதமில்லாமல் வாழும் சூழ்நிலை உருவாக்க வேண்டும்.

    முஸ்லிம்கள் இஸ்லாமியர்களாக வாழ வேண்டும். கபுறுகளை வணங்கி மரணித்தவர்களிடம் இறைவனிடம் கேட்பது போல் கேட்டு இறைவனுக்கு இணை வைத்து இஸ்லாத்தைக் கொச்சைப் படுத்தக் கூடாது.

    உரிமைகள் என்பது பாதை போடுவதும் கட்டடங்கள் கட்டுவதுமல்ல. நாம் நமது மார்க்கக் கடமைகளை இடையூறின்றி செய்வதுதான். இதை எந்தக் காரணம் கொண்டு விட்டுக் கொடுக்க முடியாது. இதில் எந்தக் கட்சியாயிருந்தாலும் ஒரு முஸ்லிம் விட்டுக் கொடுக்க முடியாது.

    குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக யார் எதைச் செய்தாலும் அவர் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும்.

    ReplyDelete
  2. உங்களின் நாட்டின் முஸ்லிம் பிரதிநிதி,சிங்கள பிரதிநிதி என்ற சிந்தனை நாட்டுக்கு அபகீர்த்தியை எட்படுத்தினும்,பேரினவாதிகள் அதை வலுப்பெற செய்து தங்கள் மேலாதிக்கத்தை நிலை நாட்டவே முழு வீச்சுடன் செயல்படுகின்றனர்

    ReplyDelete
  3. என்ன பேச்சில கலப்பு தெரியறதே, ஆப்பு விழுந்திருக்கும் போல..

    ReplyDelete
  4. I 100% AGREE WITH MR.ABU FAZEEMA. WE SHOULD NOT HAVE PARTIES WITH THIS RELEGIOUS IDENTITY.

    ReplyDelete

Powered by Blogger.