Header Ads



அக்கரைப்பற்றில் மாணவர்கள் பாராட்டி கௌரவம்


(அனாசமி)

அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள அக்கரைப்பற்று கோட்டத்தில் உள்ளகப் பரீட்சை மற்றும் மதிப்பீடுகளில் அதிஉச்சத்திறமை காட்டிய மாணவர்கள் பெற்றோர்கள் முன்னிலையில் சாதனையாளர்களாக பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். அக்கரைப்பற்று கோட்டக் கல்வியதிகாரி எம்.ஐ.எம். சகாப்தீன் தலைமையில் அக்கரைப்பற்று வலய ஆரம்பக்கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. அபுதாஹிர், ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர் மற்றும் சாதனை படைத்த பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்ட சாதனையாளர் விழா அண்மையில் அக்கரைப்பற்று ஆண்கள் கல்லூரியில் அதன் அதிபர் எம்.எஸ்.ஏ. நயீம் தொகுப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் தரம் ஐந்துக்கான விசேட புலமையாளரகள், பாடங்களில் அதிதிறமை காண்பித்தவர்கள் எனும் பல்வேறு விடயங்களில் சாதனை படைத்;திருந்த சாதனையாளர்களான மாணவர்கள் பாராட்டப்பட்டனர். மாணவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் இவர்கள் பாராட்டப்பட்டதுடன் இவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களும் பரிசாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.