திருட்டில் ஈடுபட்ட பேராதனை பல்கலைகழக மாணவன் கைது
(J.M.Hafees- and Mohamed Asik)
பேராதனை பல்கலைகழக பொறியியல் பீட இறுதி வருட மாணவன்; ஒருவன் வீடுடைத்து களவில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பேராதனையில் இடம் பெற்றுள்ளது. சந்தேக நபர் 18ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,
20 ற்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து பணம் மற்றும் தங்க நகைகளை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த வந்த போதே சந்தேகத்தின் பேரில் பேராதனை பொலீஸார் (இன்று 2013 07 07) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் என்பவற்றையும் பொலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவர் திருடிய பணம் மற்றும் நகைகள் போன்றவற்றிலிருந்து பெற்ற பணத்தால் மோட்டார் வாகனம் ஒன்றையும் கொள்வனவு செய்திருந்ததாக பொலீஸார் தெரிவித்தனர்.
நில்தண்டாஹின்ன பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய சந்தேக நபர் விவாகமான ஒருவர் என்றும் வாடகை வீட்டில் வசித்து வந்ததாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட் சந்தேக நபரை (2013 07 07 மாலை) கண்டி மேலதிக நீதவான் சேசிரி ஹேரத் முன் ஆஜர் செய்த போது எதிர்வரும் 18 ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment