இரண்டாவது முறையும் காவு கொள்ளப் பட்டது அரபு வசந்தமே.!
2011 ஜனவரி மாதம் 25 ஆம் திகதி எகிப்தில் நிகழ்ந்த அரபு வசந்தம் மிகவும் இலாகவமாக இராணுவத்தால் காவுகொள்ளப்பட்டமை தெரிந்ததே, உண்மையில் பொதுமக்களுக்கு ஆதரவானவர்களாக நடித்த இராணுவம் ஹுஸ்னி முபாரக்கை வீட்டுக் காவலில் வைத்து ஒரு உள்ளக சதிப் புரட்சியையே செய்தது.
என்றாலும் அரபு வசந்த எழுச்சியை நெறிப்படுத்துவதில் பாரிய பங்களிப்புச் செய்த இக்வான்கள் மற்றும் இஸ்லாமிய வாதிகளின் அதிகரித்த செல்வாக்கிற்கு முன்னால் 2012 ஜூன் மாதம் வரையும் இராணுவம் தனது பலத்தை தக்க வைத்துக் கொள்ளவே முயன்றது, குறிப்பாக பாராளுமன்றம் மற்றும் ஜானதிபதியிற்கான அதிகாரங்களை மாத்திரமன்றி நீதித்துறையிலும் இராணுவம் கணிசமான தலையீடுகளை செய்ததோடு இராணுவத்தின் அதிகாரங்களை மட்டுப் படுத்தும் புதிய அரசியலமைப்பு வரைவு ஒன்று முன்வைக்கப் படுவதற்கு இராணுவம் முட்டுக்கட்டைகளை போட்டுவந்தது மாத்திரமல்லாமல் அரசியலமைப்பு பிரகடனங்களையும் செய்து வந்தது வந்தது.
இராணுவத்தின் பின்புலத்தில் இருந்த யூத சியோனிச சக்திகளின் , மேலைத்தேய மேலாதிக்க சக்திகளின் காவலன் அமெரிக்கா தொடர்தேர்ச்சியாக தமது விசுவாசிகளான பர்தாயியை பிரதமராக்குமாரும், ஏனைய எதிரணியினரை ஆட்சியின் பிரதான பங்காளராக்குமாரும் எகிப்திய இஸ்லாமிய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வந்தது.
கடந்த ஒரு வருடகாலமாக அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் அதன் வளைகுடா நண்பர்கள் எகிப்தில் இருந்த கிறிஸ்தவ சிறுபானமயினரையும் பார்த்தாயி போன்ற விசுவாசிகளையும் பல்தாஜா என்று அழைக்கப் படும் இஸ்லாமிய வாதிகள் போல் நீண்ட தாடிகள் தோற்றங்களையுடைய கிறிஸ்தவ யூத நபர்கள் உற்பட பாதாள உலக கோஷ்டியினரையும் திட்டமிட்ட அடிப்படையில் வழிநடாத்தி பல சுமார் 50 பில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்க டாலர்களை செலவு செய்து இராணுவ சதிப் புரட்சியை அரங்கேற்றியுள்ளன.
2011 ஜனவரி 25 இல் நிகழ்ந்த அரபு வசந்தத்தை காவுகொண்டு ஆட்சியை கைப்பற்றிய இராணுவம் சிறிது காலம் இகவான்கள் தலைமையிலான இஸ்லாமியர்களிடம் அதனைப் பறிகொடுத்திருந்தாலும் தற்பொழுது அதனை மீண்டும் ஒரு சதிப் புரட்சி மூலம் கைப் பற்றியுள்ளது.
முபாரக் ஆட்சியில் நீதித்துறையை மிகவும் கேவலமாக கையாண்ட சட்டமா அதிபரையே மீண்டும் சட்டமா அதிபராக நியமித்து இக்வான்களுக்குக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சோடித்து விசாரணைகளை நடாத்துவதற்கான முன்னெடுப்புக்களை இராணுவ ஆட்சியாளர்கள் செய்கின்றமை 2011 ஜனவரி 25 அரபு வசந்தத்தை காவு கொண்ட இராணுவம் இன்றும் மக்கள் எழுச்சியை காவுகொண்டுள்ளதொடு பல்வேறு பிரதான தரப்புக்களை ஏமாற்றி காரியம் அபார்த்திருப்பதும் நிரூபணமாகிறது.
அஹமத் முசல்மானி எனும் ஹுஸ்னி முபாரக்கின் ஊடக ஆலோசகரை இடைக்கால பொம்மை ஜனாதிபதி மன்சூர் அத்லியுடைய ஊடக ஆலோசகராக இராணுவம் நியமித்துள்ளது.
ஜனாதிபதி முர்சி பல தவறுகளை செய்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார், எனது கருத்துப் படி ஹுஸ்னி முபாறக்கை வீழ்த்திய பின்னர் இக்வான்கள் சார்பாக முர்சியும் இராணுவம் சார்பாக அப்துல் பாத்தாஹ் சி சி யும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பொழுது மிகவும் கனிவாக பணிவாக விசுவாசியாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட அப்துல் பாத்தாஹ் சி சி யை நம்மம்ம்ம்மம்ம்ம்பி பாதுகாப்பு அமைச்சராகவும் படைகளுக்கு தளபதியுமாக நியமித்தமை தான் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நல்ல நோக்கில் அவர் செய்த மிகப் பெரிய தவறாகும்.! .
இரண்டாவது முறையும் காவு கொள்ளப் பட்டது அரபு வசந்தமே.! அரபு வசந்தத்தின் பலாபலன்களை எகிப்து மக்கள் தக்க வைத்துக் கொள்வார்களா இல்லையா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
இஸ்லாமிய நாடுகளுக்குள் புகுந்து விளையாடும் முஸ்லிம் உம்மத்தின் எல்லை தாண்டிய எதிரிகளுக்கு எல்லைகள் தாண்டி அவர்களுக்குப் புரியம் மொழியில் பதில் சொல்ல இஸ்லாமிய கிலாபத் எனும் தலைமைத்துவம் ஒருநாள் வரும், ஒரு இஸ்லாமிய எழுச்சி இயக்கத்தினதும் தலைவர்களினதும் பணி ஒரு நாட்டிற்குள் மாத்திரம் மட்டுப்பட்டு விடக்கூடாது என்பது இறைவனின் நாட்டமாகவும் இருக்கலாம்!
முர்சியும் இக்வான்களும் அவர்களோடு அணிசேர்ந்திருக்கும் இஸ்லாமியர்களும் யாருடைய நேசர்கள் யாருடைய பகைவர்கள் என்பதனை முஸ்லிம் உலகின் எதிரிகள் தான் தீர்மாணிப்பார்கள், ஏனென்றால் முஸ்லிம் உலகு அதிலும் கருத்து வேறுபாடுகளுக்குள் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும்.

இந்த முறை அரபு வசந்தம் காவு கொள்ளப் படுவதற்கு காரணமாக இருந்தவர் முர்சியே அன்றி வேறு யாருமல்ல. மொத்தத்தில் முர்சி அரபு வசந்ததத்தை பாதுகாக்க தவறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
ReplyDelete