Header Ads



எலிகளை கட்டுப்படுத்த வைக்கப்பட்டிருந்த விஷ உணவை உட்கொண்ட சிறார்கள் இருவர் பலி

மாத்தறை கம்புறுபிட்டிய பிரதேசத்தில் எலிகளை கட்டுப்படுத்துவதற்கு வைக்கப்பட்டிருந்த விஷம் கலந்த உணவை உட்கொண்ட சிறார்கள் இருவர் பலியாகினர்.

இந்த சம்பவம் 07-07-2013 மதியம் 1.20 அளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 3 மற்றும் 6 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் என்று விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

வீட்டில் தீங்கு விளைவிக்கும் எலிகளை கட்டுப்படுத்துவதற்காக, பெற்றோர் விஷம் கலந்த உணவை அவை சஞ்சரிக்கும் இடத்தில் வைத்திருந்தனர்.

பெற்றோர்களின் கவனக்குறைவாலும், சிறுவர்களுக்கு எட்டக்கூடிய இடத்தில் விஷம் கலந்த உணவு வைக்கப்பட்டமையாலும் இந்த உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

1 comment:

  1. கவனக்குறைவு என்று சொல்லிவிட்டுவிட முடியாது இது பறவாயில்லாத்தனம் அறிவற்ற செயல்.

    ReplyDelete

Powered by Blogger.