மொஹமட் முர்சியின் பதவி கவிழ்ப்பு செல்லுபடியற்றது - யூசுப் அல் கர்ழாவி பத்வா
(Tn)
எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சியை ஆட்சி கவிழ்க்கச் செய்தது செல்லுபடியற்றது என முன்னணி இஸ்லாமிய அறிஞரான யூசுப் அல் கர்ழாவி பத்வா அல்லது மதத் தீர்ப்பு வழங்கியுள்ளார். ‘ஜனாதிபதியை பதவி கவிழ்த்து அரசியலமைப்பையும் ரத்துச்செய்து புறம்பாக வேறு ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பை கொண்டு வருவது முறையற்றது’ என கர்ழாவி தனது பத்வாவில் கூறியுள்ளார்.
கட்டார் நாட்டை மையமாக கொண்டு செயற்படும் எகிப்தில் பிறந்த கர்ழாவி தனது இணையதள பக்கத்தில் இந்த பத்வாவை வழங்கியுள்ளார்.
இதில் அனைத்து தரப்புகள், அரசியல் கட்சிகள் இழைத்த தவறை சரிசெய்து முர்சியை மீண்டும் ஜனாதிபதியாக நியமித்து அவரது சட்டபூர்வ அங்கீகாரத்தை உறுதி செய்ய வேண்டும் என கர்ழாவி வலியுறுத்தியுள்ளார்.
‘தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதியின் கட்டளைகள் மற்றும் வழிகாட்டலை ஏற்று நடக்க அனைத்து நம்பிக்கையாளர்களுக்கும் ஷிரிஆ (இஸ்லாமிய சட்டம்) வலியுறுத்துகிறது.
முர்சி தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருக்க வேண்டும். மக்களின் பேரைச் சொல்லி அவரை பதவி விலக்க எவருக்கும் உரிமை இல்லை’ என கர்ழாவியின் பத்வாவில் கூறப்பட்டுள்ளது. ‘புரட்சியின் வெற்றியை பாதுகாக்க ஆண்கள் மற்றும் பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள், செல்வந்தர்கள் மற்றும் ஏழைகள், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள், மிதவாதிகள் மற்றும் இஸ்லாமியவாதிகள் என அனைத்து எகிப்தியரும் ஒன்றிணைய அழைப்பு விடுக்கிறேன்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
அல் ஜkரா தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக உரையாற்றிவரும் 86 வயதான கர்ழாவி துனீஷ்யா, எகிப்து, லிபியா மற்றும் சிரியாவில் மக்கள் எழுச்சி போராட்டம் ஆரம்பமானபோது அதற்கு ஆதரவாக நின்றவராவார்.
.jpg)
முர்சி அவசரப்பட்டார். அதன் விளைவை அவர் அடைந்து கொண்டார்.
ReplyDeleteமாற்றம் என்பது படிப்படியாக இடம்பெறும் போதுதான் அது நிலைத்து நிற்கும். காலா காலமாக இருந்து வருகின்ற விடயங்களை ஓரிரண்டு மாதங்களுக்குள் முற்றிலும் தலை கீழாக மாற்ற நினைப்பது முட்டாள் தனமே அன்றி வேறில்லை. ராஜ தந்திரம், தூர நோக்கு சிந்தனை, நீதியான ஆட்சி, மக்களின் தேவை என்ன என்பதை சரியாக புரிந்து செயற்படல் என்பன ஒரு ஆட்சியாளனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகள். முர்சியின் கடந்த ஒரு வருட கால ஆட்சியை நன்கு அவதானித்தவர் மேற்சொன்ன பண்புகள் முர்சிக்கு இல்லை என்ற முடிவுக்கே வருவார். இஸ்லாத்தின் பேரை வைத்து அவர் செய்த அரசியல் எந்தளவுக்கு அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் பிரதிபலித்தது என்பது ஒரு கேள்விக்குறியே. அரபு வசந்தத்தை பாதுகாக்கவும், எகிப்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யவும் முர்சி தவறிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.
முர்சியை ஒரு முர்சியாகவே பார்க்க வேண்டுமே தவிர அவரே இஸ்லாம் என்று சொல்வது எவ்வளவு முட்டாள் தனம். முர்சியின் ஆட்சியைப் பாதுகாப்பது என்பது இஸ்லாத்தை பாதுகாபதட்கு சமன் என்றும், முர்சிக்கு ஆதரவளிக்காதவர்கள் இஸ்லாத்தின் எதிரிகள் என்றும் பத்வா கொடுப்பது சுய சிந்தனையின், சுயநலத்தின் வெளிப்பாடே அன்றி, அது இஸ்லாத்தின் நிலைப்பாடாகாது என்பதே எனது தாழ்மையான கருத்து.
முர்சி 50% இற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றே ஆட்சிக்கு வந்தார். அதாவது 50% இற்கும் அதிகமான எகிப்தியர்கள் முர்சியை ஆதரிக்கவில்லை என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இயக்க சிந்தனைகளையும், நிலைப்பாடுகளையும் இஸ்லாமாக்க முற்படுவது மக்களை வழி கெடுக்கும் செயல் என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
அல்லாஹ் எஹிப்தியர்களுக்கு நல்லதொரு ஆட்சியை வழங்க வேண்டும் என்று பிரார்த்திப்போமாக ஆமீன்.