Header Ads



சிரேஷ்ட கல்விமான் ஏ.எம்.ஏ.ஜெலீல் காலமானார்

(பி.எம்.எம்.ஏ.காதர்)

மருதமுனையின் சிரேஷ்ட கல்விமான்களில் ஒருவரான ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எம்.ஏ.ஜெலீல் (வயது 80) நேற்று முந்தினம் காலமானார். இவரது ஜனாஸா நல்லடக்கம் அன்றிரவு மருதமுனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 1933.11.08 ஆம் திகதி மருதமுனையில் பிறந்த இவர் 1954ம் ஆண்டு ஆங்கில ஆசிரியராகப் பதவியேற்றார்.மருதமுனையின் கல்வி வளர்ச்சியில் முன்னோடியாக நின்று செயற்பட்ட கல்வியாளர்களில் இவரும் குறிப்பிடத்தக்க ஒருவராகப் பணியாற்றியுள்ளார்.

ஆரம்ப காலத்தில் மருதமுனைப் பிரதேசத்தில் ஆங்கில மொழி பெயர்ப்பதிலும்,மொழிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

55 வருடங்கள் கல்வித் துறையிலும்,சமூக,சமய விவகாரங்களிலும் தன்னை ஈடுபடுத்தி அர்ப்பணிப்புடன் மருதமுனைப் பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார்.

புள்ளிவாசல் நிர்வாகியாக,சமாதான அமைப்புகளின் பிரதிநிதியாக,வர்த்தக சமூகத்தின் ஆலோசகராக,அமைப்புகளின் ஆலோசகராக இவர் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல அரசியல் தலைவர்களோடு நெருக்கமான உறவு கொண்டு அந்த உறவை மருதமுனையின் முன்னேற்றத்துக்காகவும் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தியவர்.

எடுத்த காரியத்தை நேர்த்தியாகவும்,நேர்மையாகவும் செய்து முடிப்பதில் அக்கரை கொண்டவர்.இவர் பல்துறை சார்ந்தவர்களைத் தனது கல்விப் பின் புலத்தின் மூலம் உருவாக்கியிருக்கின்றார் என்பது சிறப்பம்சமாகும்.
இவர் ஒன்பது பிள்ளைகளின் தந்தையாவார். ஜெலீல், ஜிமாலா, பஸீலா, அஸீல், சமீலா, நஜீல், வஸீல்,துபைலா,ஹபீலா ஆகியோரே இவரது பிள்ளைகளாவர்.இவரது மனைவி ஹாறூனா ஆவார்.

மறுமையில் இவருக்கு ஈடேற்றம் கிடைக்கப் பிராத்திப்போம்.

No comments

Powered by Blogger.