Header Ads



இராணுவ அதிகாரி மேஜர் ருவன் ரணதுங்கவின் சிறந்த முன்மாதிரி (படங்கள்)


(பாருக் சிகான்)

மகரகம மற்றும் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்காக நன்கொடை நிதிசேகரிக்கும் நோக்கில் ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ருவன் ரணதுங்க தலைமையிலான குழுவினர் (7.7.2013) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

கடந்த ஜூன் மாதம் 30 ம் திகதி அன்று ஆரம்பமான இவரது நடைப்பயணம் 38 நாட்களாக தொடர்ந்து தற்போது முடிவநை;துள்ளது.

இவரது . பயணம் தெற்கு பிரதேசமான தெய்வேந்திர முனையிலிருந்து ஆரம்பமாகி  வடக்கு பருத்திதுறை வரையிலான 447 கி.மீற்றர் தூரத்தை கடந்து  .நிறைவடைந்துள்ளது.

புற்றுநோய் காரணமாக சிரமப்படும் நோயாளர்கள் தெல்லிப்பளை ,மகரகம வைத்தியசாலைகளுக்கு செல்லும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இவரது நடைபயணம் அமைந்துள்ளது.

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களின் ஊடாக இப்பயணத்தினை மேற்கொண்டு நிதியினை பெற்றுக் கொள்வது இவரது நடைபயண நோக்கமாகும்.

No comments

Powered by Blogger.