Header Ads



போராடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் - மன்சூர்



(யு.எல்.எம். றியாஸ்)

சம்மாந்துறை பிரதேசத்தில் குடி நீர் வசதி இல்லாத குடும்பங்களுள் 32 குடும்பங்களுக்கு தேசிய நீர் வளங்கள் வடிகால் அமைப்பு சபையில் இருந்து சவூதி அராபிய தன்னார்வு நிறுவனமான நிதாஉல் ஹைர் நிறுவனத்தின்  உதவியுடன் புதிய குடிநீர் இணைப்பு  பெற்றுக் கொடுக்கப்பட்டது கிழக்கு மாகான சுகாதார அமைச்சர் எம்,ஐ, எம், மன்சூர் அவர்களின்  முயற்சியின் பயனாக இக்குடும்பங்களுக்கு இவ் உதவி கிடைக்கப்பெற்றுள்ளது ,

அமைச்சரின் சம்மாந்துறை அலுவலகத்தில்  (07) ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் இவர்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார்,இந்நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில்,

 கட்சி பேதங்களுக்கு அப்பால் எனது சேவைகளை நான் சய்து வருகின்றன் அமைச்சர் என்ற வகையில் அரசினூடாகவும் ஏனைய அமைப்பிநூடாகவும் அதிசயிக்கத் தக்க பல வேலைகளை நான் செய்ய திட்டமிட்டுள்ளேன். 

என்றார் அவர் மேலும் உரையாற்றுகையில் இன்று முஸ்லிம்களுக்கு பாரிய ஆபத்துக்கள் கொண்டுவரப்பட்டு முஸ்லிம்களை இல்லதொளிக்கின்ர நிலைமை வந்து விடுமோ என்று பயப்படுகின்ற அளவுக்கு இன்று நிலைமை வந்துவிட்டது நாம் எல்லோரும் இதை நன்கு சிந்திக்க வேண்டும் அந்த அடிப்படையிலே இன்று எமது கட்சி  முஸ்லிம் காங்கிரஸ் மிகக் கடுமையாக எமது பதவிகளை திறந்தாவது  இதற்கு போராடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம், சில வேளை தலைவர் உட்பட நாங்கள் எல்லோரும் இந்த அமைச்சுப் பொறுப்புக்களை தூக்கி வீசிவிட்டு உங்களுள் ஒருவராக நின்று போராடுகின்றவர்களாக நிலைமை மாறலாம் ஆகவே அவ்வாறு நிலைமை ஏற்படக்கூடாது ஆட்சியாளர்களுக்கு நல்ல சிந்தனையையும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்களுக்கு அவர்களின் எண்ணத்தில் மாற்றங்கள் வர வேண்டும் என்று நாம் எல்லோரும் துஆ செய்யவேண்டும் எனவும் அவர் உரையாற்றினார்.

1 comment:

  1. ஊரா கோழி அறுத்து உம்மா பேரில் கத்தம் யாவும் அறிந்தவன் அல்லாஹ். போராட்டக்காலம் வருவது உண்மைதான் ஆனால் உங்களோட சேர்ந்து போராட்டம் நடத்தினா சோக்காத்தான் இருக்கும். அதென்ன சேர் ஒட்டுக்கேக்கும் போதும் முஸ்லிம் சமூதாயம் mikavum அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கு காப்பாத்தப்போறேன் ஓட்டுப் போடுங்கண்டு சொன்னீங்க வேண்டு அமைச்சராகி போராட எங்கள கூப்பிர்றீங்க .
    - சம்மாந்துறை இப்னுசித்தான்குட்டி ஆலிம் -

    ReplyDelete

Powered by Blogger.