கத்தாரில் நடைபெற்ற இஸ்லாமிய விழிப்புணர்ச்சி மாநாடு (படங்கள் இணைப்பு)
(கத்தாரில் இருந்து Nilufar Munaff QRC)
கத்தார் ஸ்ரீலங்கா தஃவா சென்டரினால் ஏற்பாடு செய்யப்பட இஸ்லாமிய விழிப்புணர்ச்சி மாநாடு, (05.07.2013) கத்தார் நேரப்படி மாலை 6.30 தொடக்கம் இரவு 10.00 மணிவரை கத்தார் மதீனா கலீபா சவுதி மர்கஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் “ரமழானை வரவேற்பது எப்படி?” எனும் தலைப்பில் கத்தார் இஸ்லாமிய விவகார அமைச்சு மற்றும் அவ்காப்(F) இமாம் அஷ்ஷெய்க் AHM.பர்ஹான் (மதனி) அவர்களும் மற்றும் “சோதனையில் சிக்கி தவிர்க்கும் முஸ்லிம்கள்” எனும் தலைப்பில் இலங்கையில் இருந்து வருகை தந்த உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழ் ஆசிரியர் அஷ்ஷெய்க் SHM.இஸ்மாயில் (ஷலபி) ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்வில் கத்தார் நாட்டின் பல பகுதிகளிலும் பணிபுரியும் இலங்கை முஸ்லிம்கள் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.


Post a Comment