சீனாவில் பணக்காரர்களுக்கு கொடுப்பதற்காக தாய்ப்பால் விற்பனை..!
சீனாவில் பணக்காரர்களுக்கு கொடுப்பதற்காக தாய்ப்பால் விற்பனை படுஜோராக நடக்கிறது. இதற்காக ஏழை தாய்மார்கள் கூலிக்கு அமர்த்தப்படுகின்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.மலிவு விலையில் தயாரிக்கப்பட்ட தரமற்ற ஏராளமான பொருட்களை தயாரித்து சீன நிறுவனங்கள் உலகளவில் சந்தைபடுத்தி வருகின்றன. இந்நிலையில், ஊட்டச் சத்து நிறைந்தது, உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்பதால் தாய்ப்பாலை புட்டியில் அடைத்து விற்க பல ஏஜென்சிகள் திடீரென முளைத்துள்ளன. இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்க பணக்காரர்கள் தயாராக உள்ளனர்.
தங்களது குழந்தைகளுக்கு மட்டுமின்றி இளவயதினரும் தாய்ப்பாலை விலைக்கு வாங்கி குடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக சிறிய அளவிலான இயந்திரங்களும் மறைமுகமாக விற்பனைக்கு வந்துள்ளன. தாய்மார்களிடம் இருந்து சிறிய பம்ப் மூலம் தாய்ப்பாலை உறிஞ்சி கணிசமான விலைக்கு விற்கின்றனர். இதற்காக தாய்மார்களுக்கு கூலியும் கொடுக்கப்படுகிறது. ஒருவருக்கு அவரவர் உடல் தகுதிக்கு ஏற்ப ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை கூலியாக கொடுக்கப்படுகிறது. இவ்வாறு கூலியாக அமர்த்தப்படும் தாய்மார்களிடம் இந்த பண வெறி பிடித்தவர்களின் வயது வந்த இளைஞர்கள் கூட நேரடியாகவோ, பம்ப் மூலமாகவோ தாய்ப்பாலை அருந்துகின்றனர் என்பதுதான் உச்சபட்ச அவலம்.
இதற்காக ஏராளமான புரோக்கர்கள், கிராமங்களில் உள்ள குழந்தை பெற்ற ஏழை தாய்மார்களை அடிமாட்டு விலைக்கு தயார் செய்கின்றனர். இதில் கணிசமான பங்கை அவர்கள் எடுத்து கொண்டு மீதமுள்ள சொற்ப பணத்தை ஏழை தாய்மார்களுக்கு வழங்குகின்றனர். தாய்ப்பாலுக்காக வாடகை தாய்மார்களை சப்ளை செய்யும் நிறுவனத்தை நடத்தி வரும் லின் யுன் என்பவர் தெரிவிக்கையில், 'பணக்கார இளைஞர்கள் தேவைப்பட்டால் நேரடியாக பாலை அருந்தலாம். ஆனால், பெரும்பாலும் பம்ப் மூலமாக உறிஞ்சப்பட்டு அதன் பிறகுதான் சப்ளை செய்யப்படுகிறது' என்கிறார் கூலாக.
பெண்களை வர்த்தக பண்டமாக நடத்தும் நிலைக்கு சீனா சென்றுள்ளது வருத்தத்தை அளிக்கிறது என்று பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மீடியாக்களில் வெளியான செய்திகளை அடுத்து சென்சென் மாகாணத்தில் தாய்ப்பால் விற்று வந்த சின்சின்யு என்ற நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தாய்மையை புனிதமாக போற்றி வணங்கி வரும் நிலையில் பாரம்பரியம் மிக்க சீன நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் திடீர் பணக்காரர்களாகிவிட்ட ஒரு சிலரின் இது போன்ற நடவடிக்கையால் சீனாவுக்கு உலக அளவில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என்று ஆன்லைனில் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆக, இந்தத் தாய்ப்பாலை வாங்கிக் குடிப்பவர்கள் சகோதரர்களாக மாற முடியாதுதானே! தாய் சேயாக முடியாதுதானே! எதில் பதிந்திருந்தாலும் எதார்த்தத்தை ஏற்காத அறிஞர்களும் நம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள். முஸ்லிம் அறிஞர்களைப்பற்றித்தான் கூறுகிறேன்.
ReplyDeleteஉலகத்தில் என்னென்ன நடக்கக்கூடாதோ அதெல்லாம் நடக்கின்றது.
ReplyDelete(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா(ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒருவர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைச் செவியுற்றேன். நான் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! அவர் (ஹஃப்ஸாவின் வீட்டுக்குள் செல்ல அனுமதி கேட்பவர்) ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினேன். நபி(ஸல்) அவர்களும், 'அவர் ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்றே நானும் நினைக்கிறேன்" என்று கூறினார்கள். நான், 'இன்னார் - என் பால்குடித் தந்தையின் சகோதரர் உயிருடன் இருந்தால் நான் திரையின்றி இருக்கும்போது என்னிடம் அவர் வரலாமா?' என்று கேட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஆம். (வரலாம்.) இரத்த உறவின் காரணத்தால் ஹராமாகிற அனைத்துமே பால்குடி உறவின் காரணத்தாலும் ஹராமாகி விடும்" என்று கூறினார்கள்.
ReplyDeleteஅறிவிப்பவர் ஆயிஷா(ரலி) (நூல்கள் - புகாரி 2646, 3105, 5099. முஸ்லிம் 2853. இந்த ஹதீஸின் பிற்பகுதி கருத்து மட்டும் அலி (ரலி) அவர்களால் அறிவிக்கப்பட்டு திர்மிதீ 1156)
நபி(ஸல்) அவர்கள், ஹம்ஸா(ரலி) அவர்களின் மகளின் விஷயத்தில், 'அவள் எனக்கு ஹலாலாக (மணந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவளாக) ஆக மாட்டாள். (ஏனெனில்) இரத்த உறவால் எந்த உறவுகளெல்லாம் (மணமுடிக்கத் தகாத) விலக்கப்பட்ட உறவுகளாகுமோ அந்த உறவுகளெல்லாம் பால்குடி உறவாலும் விலக்கப்பட்டதாகும். அவள் என் பால்குடிச் சகோதரரின் மகள் ஆவாள்" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்கள் - புகாரி 2645. முஸ்லிம் 2864)
'நான் அபூ இஹாப் இப்னு அஜீஸ் என்பவரின் மகளை மணந்தேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து, 'நான் உக்பாவுக்கும் அவர் மணந்துள்ள பெண்ணுக்கும் (அவர்களின் குழந்தைப் பருவங்களில்) பாலூட்டியிருக்கிறேன்' என்றார். அதற்கு நான் 'நீங்கள் எனக்குப் பால் கொடுத்ததே எனக்குத் தெரியாது. மேலும் (இத்தகவலை) எனக்கு (இதற்குமுன்) நீங்கள் சொல்லவுமில்லையே' என்று கூறினேன். உடனே (மக்காவில் வாழ்ந்திருந்த நான்) மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களை நோக்கிப் பயணமானேன். அங்கு சென்று அவர்களிடம் இந்தப் பிரச்சினை பற்றி விளக்கம் கேட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள் '(நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)?' என்று கேட்டார்கள். உடனே நான் அப்பெண்ணை விவாரத்துச் செய்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்தார்"
அறிவிப்பவர் உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) (நூல் - புகாரி 88, 2052, 2640, 2659, 2660. திர்மதீ 1161)