வைத்தியசாலை குறைபாடுகளை நீக்க வலியுறுத்தி வீதிக்குவந்த மூதூர் மக்கள் (படங்கள்)
(மூதூர் முறாசில் + வதூத் இர்பான்)
மூதூர் தளவைத்தியசாலையில் நிலவும் பௌதீக மற்றும் ஆளணிப் வளப் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரிக்கை விடுத்து இன்று செவ்வாய்க்கிழமை மூதூரில் பேரணியொன்று இடம்பெற்றது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இப்பேரணி மூதூர் எரிபொருள் நிலைய சந்தியிலிருந்து ஆரம்பித்து தளவைத்தியசாலை வரை சென்றது.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் வைத்திய சாலைக்குத் தேவையான ஆளணியினரை பெற்றுத் தருமாறும் போதிய கட்டிட வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் எழுதப்பட்ட வாசகங்களை தாங்கிய அட்டைகளை ஏந்திச் சென்றனர்.
மிகப்பழமையான இவ்வைத்திய சாலை 2006ஆம் ஆண்டு முதல் தளவைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டபோதும் போதிய வசதிகள் எதுவும்இல்லாத நிலையிலேயே தொடர்ந்து இருந்து வருகின்றது.
பேரணியை ஏற்பாடுசெய்த வைத்தியசாலை அபிவிருத்திக் குழு தலைவரும் முன்னாள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.எம்.தௌபீக் கருத்து தெரிவித்த போது,
இவ்வைத்தியசாலையானது தளவைத்தியசாலையாக இருப்பதனால் மூதூர் பிரதேச மக்கள் மட்டுமன்றி ஈச்சிலம் பற்று, சேருவில பிரதேசங்களையும் உள்ளடக்கி சுமார் ஒரு இலட்சம் பேர்களின் வைத்தியத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும் ஆனால் குறைந்தளவான ஆளணியினரும் பௌதீக வளப்பற்றாக்குறையும் மக்களுக்கு போதிய வைத்திய சேவையை வழங்குவதற்குத் பெரும் தடையாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.



mutur makkalin waakkuhalal paralumandram pohum urimaikkavalarhale!
ReplyDeleteneengal therthal thiruvilavil pesum URIMAIHALAI THATTIKKETPOM KATTIKKAAPPOM enpathu ithuthaan.
enge mullanthandirunthaal mutur hospital pirachinai patri paralumanraththil kelvi kelungal paarpom??????????