Header Ads



அரசியல்வாதிகள் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் - அமைச்சர் அதாவுல்லா

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

விடுதலை என்பது தனது மண்ணில் சுதந்திரமாக வாழ்வது தான் பொருளாகும். ஆனால் கடந்த 30 வருட காலம் விடுதலை என்ற போர்வைில் மக்களை அச்சுறுத்தி அவர்களது சுதந்திர நடமாட்டத்தை இல்லாமல் செய்த யுகத்தையே காணமுடிந்தது என தெரிவித்த உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா எவ்வித உரிமைகளையும் பெற்றுத்தர முடியாத குழுக்களின் செயற்பாடுகள் குறித்து மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

மன்னார் மாவட்டத்தில்  தலைமன்னார் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட நவீன பாதைகளை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனின் வேண்டுகோளில் மன்னார் மாவட்டத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த அமைச்சர் அதாவுல்லா அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு  மேலும் உரைாயற்றுகையில் கூறியதாவது,

கடந்த 30 வருட காலமாக வடக்கிலும்,கிழக்கிலும் யாரும் அபிவிருத்திகளை செய்ய முன்வரவில்லை.அன்று மின்சார பிறப்பாக்கிகளை,தொலைபேசி நிலையங்களை,வைத்தியசாலைகளை.மற்றும் இன்னோரன்ன பெறுமதியான சொத்துக்களை எல்லாம் பயங்கரவாதம் தாமாகவே அழித்து சேதப்படுத்தி மக்களது இயல்பு வாழ்க்கைக்கு இடையூறுகளை செய்தது.அரச அதிகாரிகள் தமது பணிகளை செய்யவிடாமல் அவர்களை விரட்டியடிக்கும் பணியினையும் செய்தது, நாங்களே அபிவிருத்திகள் தேவையில்லை என்று கூறிக் கொண்டு,எமது மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க போராடுகின்றோம் என்று கூறியதை இன்னும் மறந்துவிட முடியாது.

அப்பாவி மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு அந்த மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்காது,அந்த மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு தமது பிள்ளைகளை உயர் பாடசாலைகளிலும்,இந்தியாவிலும் சென்று கற்க வைக்கும் அவலத்தனமான ஒரு அரசியலை செய்து கொண்டு,குழுக்காளக பிரிந்து ஆயுதம் ஏந்தி,தமக்கு எதிரானவர்கள் என்பதினால் 

தமது சகோதரர்களையே சுட்டுக் கொண்ட அரசியல் வாதிகள் குறித்தும் எமது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். இன்று இந்த மக்கள் அச்சமற்ற சூழ் நிலையில் வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு இந்த நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகள் காரணம் என்பதை மறந்துவிட முடியாது.மக்கள் இன்று ஆலயங்களுக்கு அச்சமின்றி சென்று தமது மத வழிபாடுகளை செய்கின்றனர்.பாடசாலைக்கு மாணவர்கள் சென்று கற்கின்றனர்,அரச அதிகாரிகள் தமது பணிகளை அச்சமின்றி செய்கின்றனர்.இது தான் மக்களுக்கான விடுதலையாகும்.

மன்னார் மாவட்டத்திற்கு நான் இரண்டாவது முறையாக வந்துள்ளேன்.அதுவும் உத்தியோகபூர்வமாக முதற் தடவையாக வருகைத்தந்துள்ளேன்.1976 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விமானத்தில் சென்று அதன் பிறகு இராமானுஜம் என்ற கப்பல் மூலம் தலைமன்னாருக்கு வந்தேன்.
ஒரு நாட்டினதும் பிரதேசத்தினதும் அபிவிருத்தி என்பது,அப்பிரதேசத்தின் பாதைகளின் அபிவிருத்தியில் தங்கியுள்ளது.நவீன மயப்படுத்தப்பட்ட பாதைகளால் கிராமங்களின் வருமானம் அதிகரிக்கின்றது.அதிமான தொழில் வாய்ப்புக்களை கொண்டுவருவதற்கு அது வழி வகுக்கின்றது.அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியினால் இன்று இந்த அபிவிருத்தி பணிகளை மக்களிடம் கொண்டுவர முடிந்தது என்றும் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கூறினார்.

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திசிறி ,பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்உட்பட திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள்,அரசியல் பிரதி நிதிகள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.

7 comments:

  1. நீங்கள் அரசியல்வாதி இல்லாமல் அரசியல் வியாபாரியோ...?

    புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. Ivar Sonna Vidayaththukku Utharaname Ivarthaan.

    ReplyDelete
  3. எனவே, அரசியல்வாதியான அதாவுல்லாஹ் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும்!

    ReplyDelete
  4. Good Definition for Development by the Minister.

    1) A4 Road recently developed as carpet and widened but the Narrowest line of A4 goes only thorough Akkaraipattu

    2) A few roads in Akkaraipattu were repaired just few months back

    ReplyDelete
  5. MUSLIMS ARE FACING SO MANY PROBLEMS IN SRI LANKA..BUT YOU , ATHAA , SINGING IN MUSICAL PROGRAMME IN VASANTHAM TV AND ENJOYING LIFE FORGETTING ALL MUSLIMS PROBLEMS........ YOU ARE SSSOOOOOOOOO GG RR EE AA TT ......./????////////

    ReplyDelete
  6. Muslim Makkal Vaaitheerakkathavarai
    Muslim Arasiyal Veevachcharikal Erunthugonduthan Erupparkal

    ==========Kalmunai Mohamed Fowse++++++++++++++

    ReplyDelete

Powered by Blogger.