Header Ads



தொழுகைக்காக பள்ளிக்கு செல்வோர் ஹெல்மட் அணிவது கட்டாயம் - பிரதி பொலிமா அதிபர்



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மோட்டார் சைக்களில் செல்வோர் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும் என்பது இலங்கை பொலிஸாரின் சட்டமாகும்  எனினும் கிழக்கு மாகாணத்தில் அதிகம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 மணி தொடக்கம் 2 மணி வரை ஜும் ஆ தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு செல்வோர் தலைக்கவசம் அணியத்தேவை இல்லை' என மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி 5ஆம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலில் தெரிவித்தாக முக்கிய தமிழ் இணையத்தளங்கலிலும், பத்திரிகையிலும், ஊர் இணையத்தளங்கலிலும் செய்திகள் வெளியாகியிருந்தது யாவரும் அறிந்த விடயமே.

எனினும் 17-05-2013 இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாமல் ஜூம்மா தொழுகைக்காக  சென்ற முஸ்லிம் பொது மக்களை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் பிடித்து அவர்களின் சாரதி அனுமதி பத்திரங்ளை பறிமுதல் செய்ததுடன் அவர்களில் சிலருக்கு தண்டப்பணமும், நீதிமன்றம் செல்வதற்கு (தட கொலைகளையும்) அபராத சீட்டுக்களையும் வழங்கியுள்ளனர்.அத்தோடு பொலிசாரிடம் கருத்து தெரிவித்த பொது மக்கள் பொலிசாரிடம் தங்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலில் வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன் வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 மணி தொடக்கம் 2 மணி வரை ஜும் ஆ தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு செல்வோர் தலைக்கவசம் அணியத்தேவை இல்லை' என்று தெரிவித்ததாகவும் கூறினர் அதற்கு கருத்து தெரிவித்த பொலிசார் அப்படியானால் நீங்கள் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரனை தொடர்பு கொண்டு அவரிடம் சொல்லுங்கள் அவர் சொன்னால் நான் விட்டு விடுகின்றேன் என்று தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரனை தொடர்பு கொண்டு கேட்ட போது வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 மணி தொடக்கம் 2 மணி வரை ஜும்ஆ தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு செல்வோர் தலைக்கவசம் அணியத்தேவை இல்லை' தான் சொல்வில்லை என்றும் மோட்டார் சைக்களில் செல்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும் எனவும் தெரிவித்ததோடு மட்டுமன்றி அதனை மீறுவோருக்கு பொலிசார் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருந்தாலும் இன்று வெள்ளிக்கிழமை தலைக்கவசம் அணியாமல் பள்ளிவாயலுக்கு தொழுகைக்காக சென்ற பொது மக்களை பொலிசார் பிடித்த காரணத்தால் சிலரின் ஜூம்மா தொழுகைகளும் பாழாகியுள்ளது.

ஜும்ஆ தொழுகைக்கான பள்ளிவாயலுக்கு செல்வோர் தலைக்கவசம் அணியும் விடயம் தொடர்பில் மக்கள் மத்தியில் தெளிவான விளக்கம் இல்லாத காரணத்தால் இதற்கு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் பொலிஸ் திணைக்களம் முஸ்லிம் மக்களுக்ளு தெளிவை வழங்க வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.



7 comments:

  1. முஸ்லிம் பிரதேசங்களில் அதிலும் குறிப்பாக காத்தான்குடி போன்ற சிறிய நிலப்பரப்பு கொண்ட ஊர்களில் போக்குவரத்துப் பொலிசாரின் கேடு பிடி மிகவும் அதிகமாக உள்ளது. சிங்க தமிழ் பிரதேசங்களில் இவ்வாறானதொரு நிலை இல்லை. முஸ்லிம்களை சிரமப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு இவர்கள் இப்படிச் செய்கிறார்களா அல்லது லஞ்சம் பெறுவதற்காக முனைகிறார்களா என்று சந்தேகமாக உள்ளது.

    ReplyDelete
  2. My Muslim Brothers,

    wearing Helmet is for your safety, not for the safety of Police. Further there is no harm in putting it one your head rather it is beneficial to you. Further more it is not in accordance with our religion as it protects you from any accident by Allah permission.

    Dear brothers, it is completely not acceptable that..confronting with the safety rules of the state that are benefiting you. If you ignore the rules of state, you have no difference with BBS which is already over power rules of states by trying to behave as they wanted.

    Let us live as Srilankan-Muslims respecting the ruels of state that does not contradict with the LAW of creator.

    Muhammed

    ReplyDelete
  3. இவர்கள் நோ்மை தெரியாதவா்கள்.இவர்கள் நமது பாதுகாப்புக்காக பிடிக்கின்றார்கள் என்பது 100% பொய் அதை நாங்கள் அறிய வேண்டும் அதற்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் முடிவு எடுக்க
    வேண்டும் நிலை ...........

    ReplyDelete
  4. As Muslims, we should be an example to others. We cant change the state rules in the name of religion. It will give bad impression on us especially in this situation. And also, wearing helmet is for our safety not for any other reason. Please don't involve in any act which can destroy our future. May Almighty Allah bless us!

    ReplyDelete
  5. Most of the Traffic Police officers are trying to bribe, any how helmet is our safe

    ReplyDelete
  6. இந்த அரசு முஸ்லிம்களுக்கு எதிராக எப்படியெல்லாம் தனது அராஜகத்தை நடைமுறை படுத்த முடியும் என்று ரூம் போட்டு யோசித்து அதனை நடை முறை படுத்துகிறார்கள். காத்தான்குடி மட்டுமில்லை ஏன் புத்தளத்திலும் கூட இந்த கெடுபிடி நேற்று நடை முறை படுத்தப்பட்டது. இதற்கு முன் ஜும் ஆ வுக்கு போகும்போது 2 மணிவரை (டவுனில்) யாரும் ஹெல்மெட் அணிவதில்லை. திடீரென்று எங்கிருந்து வந்ததோ இந்த உத்தியோக பற்று. பொது பல சேனாவின் ஆலோசனையாக இருக்கலாம்.

    சட்டம் மனிதர்களுக்கஹா இருக்க வேண்டுமே தவிர . சட்டத்திட்கஹா மனிதர்கள் என்று இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இப்படியான நேரத்தில் சட்டத்தை தளர்த்தினால் ஒன்றும் குடி முழுகிப் போவது இல்லை.

    ஒரு அமைச்சர் வரும்போது எல்லாப் பாதைகளையும் மூடி பொது மக்களின் அன்றாட பணிகளை தடுத்து நிறுத்தி அமைச்சர் மட்டும் செல்ல அனுமதிக்க சட்டத்தில் இடமுண்டானால் ! 2 மணி நேரம் இந்த தலைக்கவச சட்டத்தை தளர்த்துவதில் எவ்வித பிரச்சனையும் இல்லை?

    வேண்டா பெண்டாட்டி கை பட்டாள் குற்றம் , கால் பட்டாள் குற்றமாம்.

    ReplyDelete
  7. healmet poodal korancha pohum pottukkittu poongappa ipa irukkira nilamaihalai purinchi urimai halai mattum kaappathunga musligalahiya naam munmathiriyaha irukkawendum

    ReplyDelete

Powered by Blogger.