வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் ஆரம்பம் - பிரதி தேர்தல் ஆணையாளர் மொகமட்
2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்புப் படிவம் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனை மீளப்பெறும் நடவடிக்கைகள் ஜூன் 2ம் திகதி முதல் ஆரம்பமாகுமெனவும் வாக்காளர்கள் முழுமையாக ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென்றும் தேர்தல் செயலகம் தெரிவிக்கின்றது.
ஒருவர் இரு பிரதேசங்களில் தமது பெயர்களைப் பதிதல், பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை சேர்ப்பதற்காக பதிதல் மற்றும் சட்டவிரோத காணிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தமது பெயர்களைப் பதிய முற்படுபவர்கள் தொடர்பில் இம்முறை மிகுந்த கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதனைத் தடுக்கும் வகையில் அடையாள அட்டை இலக்கத்தைப் பரீட்சிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொகமட் தெரிவித்தார்.
ஜூன் முதலாம் திகதியை வாக்காளர் தினமாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளதுடன் “வாக்களிப்பது உங்கள் உரிமை” என்ற தொனிப்பொருளில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்களிக்கத் தகுதியுள்ளோர் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் .
அவர்கள் தமது பெயர்களை வாக்காளர் இடாப்பில் பதிதல் மிகவும் அவசியமாகும்.இதனை வலியுறுத்தும் வகையில் சகல பிரதேசங்களிலும் “பேனர்களை” காட்சிப்படுத்தவும் தேர்தல் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வருடத்தில் தேர்தலொன்று நடைபெறுமானால் அது 2011 தேர்தல் இடாப்புக்கு இணங்கவே நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். tnlk

Post a Comment