Header Ads



அமெரிக்கப் படையிடம் பிடிபட்டபோது ஒசாமா தன்னைத்தானே வெடிக்கச் செய்தார்..?

(Tn) அமெரிக்கப் படையிடம் பிடிபட்ட போது அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லாடன் தன்னைத் தானே வெடிக்கச் செய்து கொண்டதாக அவரது முன்னாள் மெய் பாதுகாவலர் குறிப்பிட்டுள்ளார். எகிப்து ஜிஹாத் முன்னணியின் முன்னாள் தலைவரான அப்துல் பத்தாஹ் கல்ப் செய்திச் சேவைக்கு பேட்டி அளித்திருந்தார். 

அதில் அவர், அபோதாபாத் வளாகத்திற்குள் அமெரிக்காவின் நெவி சீல் படை ஒசாமா பின்லாடனின் இரு பாதுகாவலர்களை கொன்று பின்னர் பின்லாடனின் தொடைப் பகுதியில் சுட்டனர். அதனைத் தொடர்ந்து பின்லாடன் தற்கொலை அங்கி மூலம் தன்னைத் தானே வெடிக்கச் செய்து கொண்டார் என குறிப்பிட்டார். 

சம்பவம் இடம் பெற்ற போது தான் அங்கிருக்கவில்லை என்றும் பின்லாடன் உறவினர் மூலம் இந்த தகவலை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் பின்லாடன் உடல் கடலில் புதைக்கப்பட்டதாக கூறும் ஒபாமாவின் கதை பொய்யானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தன்னைத்தானே வெடிக்கச் செய்து கொண்டதன் மூலம் பின்லாடனின் உடல் துண்டு துண்டாக சிதறிவிட்டதாகவும் அமெரிக்கப் படைக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை என்றும் அப்துல் பதாஹ் விபரித்துள்ளார்.

ஒசாமா பின்லாடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடன் தற்கொலை அங்கியை அணிந்திருந்ததாக பதாஹ் அந்த பேட்டியில் குறிப்பிட் டுள்ளார்.

கடந்த 2011 மே 2 ம் திகதி அமெரிக்காவின் இராணுவ நடவடிக் கையில் ஒசாமா பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அதற்கான புகைப்பட ஆதாரம் இருப்பதாகவும் அமெரிக்கா கூறி வருகின்றது.

2 comments:

  1. இஸ்லாம் மார்கத்துக்காவே தன்னை அர்பணித்து வாழ்ந்த ஒரு தியாஹியின் மரணத்தைக் கொச்சைப்படுத்துவதாகவே இந்த செய்தி அமைந்துள்ளது. தற்கொலை செய்து கொள்வதோ, போரில் புறமுதிகிட்டு ஓடுவதோ ஹறாமாக்கப்பட்ட விடயம். அல்லாஹ்வும் நபி(ஸல்) அவர்களும் மிகவும் வெறுத்த விடயம். பின்லேடன் அவ்வாறு செய்திருக்கமாட்டார். எனவே இதுபோன்ற விடயங்களை நன்கு ஆராய்ந்த பின் பிரசுரிக்குமாறு ஜப்னா முஸ்லிமைக் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.