Header Ads



அடுத்த தினங்களில் என்னநடக்கும் என்ற பயத்தில் இருக்கிறோம் - மியன்மார் முஸ்லிம்கள்


மியன்மாரில் மீண்டும் மத வன்முறை வெடித்துள்ளது. வடகிழக்கு ஷான் மாநிலத்தில் முஸ்லிம் அனாதை இல்லம், ஒரு பள்ளிவாசல் மற்றும் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் தொடரும் மத வன்முறைகள் தொடர்பில் கடந்த பெப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்ட 969 என்ற தீவிர பெளத்த அமைப்பு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வன்முறைகள் தணிந்த போதும் நேற்றைய தினத்திலும் லஷியோ பகுதியில் பதற்றம் நீடித்தது. நகரின் வீதிகள் எங்கும் வெறிச்சோடி காணப்படுவதாகவும் வதந்திகள் பரவி வருவதாகவும் அங்கிருக்கும் முஸ்லிம் வாசி ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.

“அடுத்த ஒரு சில தினங்களில் என்ன நடக்கும் என்ற பயத்திலேயே நாம் இருக்கிறோம். எல்லா முஸ்லிம்களும் பாதுகாப்பான இடத்தில் இருக்கவே முயற்சிக்கிறோம். இரவுகளை எப்படி கழிக்கப்போகிறோம் என எமக்கு புரியவில்லை” என்று பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையில் அவர் தொலைபேசி ஊடாகவே தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.