முஸ்லிம்களுக்கு குடும்ப கட்டுப்பாடு - ஆதாயம் தேடும் ஆங்சாங் சூகி.
இவர்தான் இன்றைய மியன்மாரின் எதிர் கட்சித் தலைவரும், கடந்த சில வருடங்களுக்கு முன் உலகின் மிகப் பெரிய ஜனநாயகவாதியாக போற்றப் பட்டவரும், முழு உலகின் கவனத்தையும் தனது அரசியல் போராட்டத்தின் மூலம் ஈர்த்தவருமான ஆங்சாங் சூகி.
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் மியன்மாரில் ஜனநாயக ஆட்சி உருவாக வேண்டும், அநீதிகள் நிறுத்தப் படவேண்டும், நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையான சுதந்திரம் வேண்டும் என்றெல்லாம் கோஷம் போட்டு ஆர்பாட்டங்கள் நடாத்தி முழு உலகையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருந்தார். ஜனநாயகப் போராட்டம் செய்ததற்காக முன்பு ஜெயிலுக்கும் போய் வந்துள்ளார்.
ஜெயிலில் இருந்து வெளியே வந்தவர் தனது போராட்டத்தின் காரணமாகவே கடந்த தேர்தலில் எதிர் கட்சித் தலைவியாகினார்.உலகம் அவரை மியன்மாரின் ஹீரோயினாகவே சித்தரித்துக் காட்டியது. மிகச் சிறந்த ஜனநாயகவாதியாக உலக மீடியாக்கள் எழுதித் தள்ளின. நாமும் அவற்றைப் பார்த்து விட்டு சூகி பற்றி அவ்வாறே எண்ணியிருந்தோம். இதுவே சூகியின் முதலாவது முகம். இம் முகம் கொண்டே உலகம் சூகியை நினைவு கூறுகிறது.
ஆனால் இதே ஆங்சாங் சூகியிற்கு இன்னுமொரு முகமும் உள்ளது என்பது உலகுக்குத் தெரியாது. கடந்த வருடம் மியன்மாரில் முஸ்லிம்கள் பௌத்த இனவாதிகளால் கடுமையான இன்னல்களுக்கு உள்ளாக ஆரம்பமான போது அதற்கு எதிராக சூகி நிச்சயம் போராடுவார் என்று முஸ்லிம் உலகு உறுதியாக நம்பியது. மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப் பெரிய அராஜகங்கள்,கொலைகள், கற்பழிப்புகள்,உயிரோடு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் எரிக்கப் பட்டமை என உலகே அதிரும் அழவு அநியாயங்கள் இன்று வரை ஒரு வருடத்துக்கும் மேலாக நடை பெற்று வருகின்றன. ஆனாலும் உலகின் ஜனநாயகவாதியாக தன்னைக் காட்டிக் கொண்டு, உலக அளவில் அதி முக்கியத்துவம் வாய்ந்த எவோர்டுகளை எல்லாம் அள்ளிக் கொண்டு தான் பெற்ற செல்வாக்கைப் பண்படுத்தி மியன்மார் பாராளுமன்றில் எதிர் கட்சி தலைவியும் ஆகிவிட்ட இந்தத் துரோகி ஆங்சாங் சூகி அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப் பட்டுள்ள எந்தவொரு அநியாயத்துக்கு எதிராகவும் இன்றுவரை மூச்சுக் கூட விடவே இல்லை.
மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளுக்கும் காரணமாக இருக்கின்ற பிக்கு "விராது" முன்பும் இது போன்ற அநியாயங்களை முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றி ஜெயில் சென்று வந்தவரே. ஆகவே பிக்கு "விராது" வின் நடவடிக்கைகள் பற்றி அங்குள்ள முஸ்லிம்கள் நன்றாகவே அறிந்து வைத்திருந்தனர்.
ஆனால் இந்த ஆங்சாங் சூகியோ தன்னை மிகச் சிறந்த ஜனநாயகவாதியாகக் காட்டிக் கொண்டதால் மியன்மாரில் வாக்குரிமையுள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் கடந்த தேர்தலில் சூகியிற்கே தமது வாக்குகளை அள்ளி இறைத்தனர். அவர் பாராளுமன்றம் சென்று முஸ்லிம்களின் அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு முஸ்லிம்களிடம் இருந்தது. ஆனால் சூகி பாராளுமன்றம் சென்ற கையோடு முஸ்லிம்களை கைகழுவி விட்டார். பிக்கு "விராது" வை போலவே ஆங்சாங் சூகியுடனும் அங்குள்ள முஸ்லிம்கள் அதிக ஆத்திரம் கொண்டுள்ளதோடு சூகியை துரோகியென்றே அழைக்கின்றனர்.
நேற்று வரை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி மூச்சுக் கூட விடாத சூகி, அங்கு முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள முடியாது என்ற சட்டம் நேற்று பாராளுமன்றத்துக்கு வந்த போது அதற்கு ஆற்சேபனை தெரிவித்து சிறு கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். ஏதோ ஒரு அரசியல் இலாபத்துக்காகத் தான் சூகி இதைக் கூட செய்திருக்கலாம் என்று அந் நாட்டு முஸ்லிம்கள் தற்போது சந்தேகிப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment