Header Ads



ஜப்னா முஸ்லிம் இணைய செய்திக்கு பலன் கிடைத்தது

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் கவனிப்பாரற்று கிடக்கும் பஸ் தரிப்பு நிலையம் தொடர்பில் ஜப்னா முஸ்லிம் இணையம் கொண்டுவந்த செய்தியை பார்த்ததன் பின்னர் இதனை புனரமைப்பு செய்வது குறித்து தமது கவனத்தை செலுத்தியுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தெரிவித்துள்ளார்.

தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இந்த பஸ் தரிப்பு நிலையம் நிர்மாணிக்கப்பட்டதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், கடந்த காலங்களில் பெய்த மழையினையடுத்து இந்த பஸ்தரிப்பு நிலையம் சேதத்துக்குள்ளானதாக அறிய கிடைத்துள்ளதாக கூறினார்.

அதே வேளை தமது செயலாளருடன் தொடர்பு கொண்டு இது குறித்து நேரில் சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் பணிப்புரை வழங்கியுள்ளார்.

எமது முந்திய செய்தி

http://www.jaffnamuslim.com/2013/05/blog-post_5587.html





No comments

Powered by Blogger.