தவ்ஹீத் ஜமாஅத் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் சந்திப்பு
பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாகத்திற்குமிடையில் 16-05-2013 அன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் தவ்ஹீத் ஜமாஆத் சார்பில் தமது இஸ்லாமிய பிரச்சார பணிகளுக்கு தடை ஏற்படுத்தப்படுகின்றமை குறித்து பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டுள்ள அதேவேளை சில இனவாத அமைப்புக்கள் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களுக்கு அனுமதியளிக்கப்படுவதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை அண்மையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாதாந்த சஞ்சீகையில் வெளியாகிய கட்டுரையொன்று குறித்தும் இதன்போது தவ்ஹீத் ஜமாஆத்திடம் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
மேலும் இக்கலந்துரையாடலின் போது தவ்ஹீத் ஜமாஆத்தின் இஸ்லாத்தை பிரச்சாரப்படுத்தும் அல்லது அழைப்பு பணிகளுக்கு தடைகளை ஏற்படுத்தமாட்டோமெனவும், அந்த பணிகளை சுதந்திரமாக முன்னெடுக்க முடியுமெனவும் பாதுகாப்பு அமைச்சின் சார்பில் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறியவருகிறது.
இச்சந்திப்பை தவ்ஹீத் ஜமாஅத்தின் நெருங்கிய வட்டாரங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சற்று நேரத்திற்கு முன்னர் உறுதிப்படுத்தின.

உங்களின் இயக்க வெறிப் பிரச்சாரத்தினை இஸ்லாமியப் பிரச்சாரம் என பெயர் சூட்டி உண்மையான இஸ்லாமியப் பிரச்சாரர்களுக்கும் இழுக்கை உண்டுபண்ணாதீர்கள். நீங்கள் செய்வது தஃவா இல்லை. உங்கள் இயக்கத்தின்மீதான அழைப்பு. இதற்கு இஸ்லாத்தை விற்காதீர்கள்.
ReplyDeleteஇதைப் போய் யாரிடத்தில் முறைப்படுறாங்க பாருங்க
ReplyDeleteSLTJ was afraid that cant continue there daily activity so they went to conform their own publishes,not for Muslim Um math,Gota agree for publish, i wish to ignore like this GROUPS in SL. fallow the ACJU they only thinking talking for Muslim Um-math.
ReplyDeleteவெட்கமில்லாதவர்களே இஸ்லாத்தை பரப்புவதற்கு தடையாக இருக்கிறதென்று ஒரு காபீரிடம் உதவி கேட்கிறீர்களா???? நானும் ஒரு தவ்ஹீத்வாதீ ...... உங்களை நினைத்தால் வெட்கமாக உள்ளது........
ReplyDeleteShatthiyathukku thaan ethirppu varum.
ReplyDeleteUnmayey shollum poothu poyyil iruppavarhalukku koofam varum.
Mr. Swen, Poyyaichollumpothum unmayil ullawarhalukku kopam warum.
ReplyDelete