Header Ads



ஏறாவூரில் புதிய ஜூம்ஆ பள்ளிவாயல் திறப்பு (படங்கள்)


(எம்.ரீ.எம்.பாரிஸ்)

ஏறாவூர் மர்கசுல் இஸ்லாமி ஜூம்ஆ பள்ளிவாயல் திறப்பு நிகழ்வும்  மார்க்கச் சொற்பொழிவும் இன்று வெள்ளிக்கிழமை 17.05.2013 இடம் பெறவுள்ளது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக குவைத் நாட்டின்  பெரிய பள்ளி வாயலின் இமாம் அஷ்ஷெய்க் மிஷாரி  அல் ஹர்ராஸ் அவர்களும் ஜமாஅத் அன்சாரில் சுன்னதில் முகம்மதிய்யாவின் பொது தலைவர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். அபூபக்கர் சித்தீக் மதனி அவர்களும் அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இப்பள்ளிவாயல் இலங்கை ஜமாஅத் அன்ஸாரில் சுன்னதில் முஹம்மதிய்யாவினால் கிழக்கிழங்கையில் நிர்மானிக்கப்பட்ட பள்ளிவாயல்களில் அமைவிடத்திற்கும் பள்ளிக்குமாக 04 நான்கு கொடி ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்ட பெரியதொரு ஜூம்ஆ பள்ளி வாயலாக இது கருதப்படுகின்றது.

இந் நிகழ்வில் 'பெண்களே! உங்களுக்குத்தான்' எனும் நூல் வெளியீடும் செய்து வைக்கப்பட்டது.

இந் மஸ்ஜித் திறப்பு  நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர்,பிரதி முதல்வர் எம்.எஸ்.சுபையிர் உள்ளீட்ட முக்கிய பிரமுகர்கள் கல்வி மான்கள் ஆயிரக்கணக்கான இஸ்லாமியச்சகோதரர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




1 comment:

  1. அல்ஹம்துலில்லாஹ். அழகான விசாலமான பள்ளிவாசல். இதை நிருவியவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் பரிபூரண நன்மையை வழங்குவானாக.

    ReplyDelete

Powered by Blogger.