Header Ads



முஸ்லிம்களே..! பேரம் பேசும் சக்தியை உறுதிப்படுத்துங்கள்..!!


(கே.சி.எம்.அஸ்ஹர்)

என் நேசத்திற்குரிய முஸ்லிம்களே..!

தற்போது எமது நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் வாக்காளர் இடாப்புத் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்போது பின்வரும் பணிகள் இடம்பெறுகின்றன.

1, உரியவரின் பதிவை மீண்டும் உறுதிப்படுத்தல்

2, புதிய வாக்காளர்களைச் சேர்த்தல்

3, ஒரு பிரதேசத்தில் இருந்து இன்னொரு பிரதேசத்திற்கு வாக்காளர் பதிவை மாற்றுதல்

போன்ற முக்கிய பணிகள் இடம்பெறுகின்றன. இவ்வேளையில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து உங்கள் வாக்காளர் பதிவை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உரிய வயதை அடைந்த புதிய வாக்காளர்கள் உங்கள் குடும்பத்தில் இருப்பின் தவறாது அவர்களையும் பதிந்து கொள்ளுங்கள்.

எமது மூதாதையர்களால் போராடிப்பெற்றுக் கொடுக்கப்பட்ட எமது வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும்.

நீங்கள் இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களில் வசிப்பவராயினும், உங்கள் வாக்காளர் பதிவினை வலுப்படுத்த வேண்டும். 

இவ்விடயம் தொடர்பான ஒரு விழிப்புணர்வை ஊடகங்கள், புத்தஜீவிகள், சமயத்தலைவர்கள்,படித்த இளைஞர் யுவதிகள், அரசியல் கட்சிகள் போன்றோர் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும்...!

2 comments:

  1. Ok அது சரி. நாம் யாருக்குத் தான் வாக்குப் போடனுமாம்? முஸ்லிம் எனும்பெயரில் முனாபிக்குகள் தானே இருக்கிறார்கள்

    ReplyDelete
  2. முஸ்லிம்களின் பேரம் பேசும் சக்தியை உறுதி செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மாறாக நினைத்தவரல்லாம் தலைவராக, நினைத்தவரல்லாம் பதவி மோகத்துல, நினைத்தவரல்லாம் நான்தான் என்ற மமதயில் எல்லோரும் ஆட்சி செய்ய / வழி நடாத்தப்பார்த்தால், எல்லோரும் காரியம் செய்யப்பார்த்தால் அல்லாஹ்வின் முடிவு பயங்கரமாகத்தான் வந்து முடியும் என்பதுதான் உஹதுடய யுத்தம் நமக்குத்தரும் படிப்பினை.

    ReplyDelete

Powered by Blogger.