ஊடகவியலாளர் கைது
கடந்த வெசாக் பௌர்ணமி தினமன்று மிருக வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மதகுரு போவத்தே இந்திரரட்ன தேரர் தொடர்பில் தற்போது விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக ஊடகவியலாளர்கள் சிலர் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உடனடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.தற்கொலை செய்துகொள்ள முன்னர் மதகுரு உள்ளுர் ஊடகமொன்றுக்கு தனது தற்கொலை தொடர்பில் முன்கூட்டியே கருத்து வெளியிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் குறித்து குற்ற விசாரணைப் பிரிவினர் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன்,சம்பவம் தொடர்பில் வீடியோ காட்சிகளை பதிவு செய்த ஊடகவியலாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் தற்கொலையை தடுக்காது அதனை வீடியோ படமெடுத்ததாகத் தெரிவித்தே கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

The journalist has been silent to encourage the immolation. In a way, he has encouraged the incident giving a hope for the Bikku to be proclaimed a hero. This act of journalist must be condemned. Lord Buddha would agree with the Bikku and all others supporting the incident including the the journalist and the Minister Wimal
ReplyDeleteதற்கொலை முயற்சி செய்திருந்தால் தடுத்திருக்கலாம்....
ReplyDeleteகொலை செய்வார்கள் என்று ஊடகவியலாளர் எதிர்பார்த்திருக்க மாட்டார்....
there was not only journalist public also there
ReplyDeleteits seems a murder rather than a suicide as per a video taken from another angle.
ReplyDeleteஊடகவியலாளர்களை கைது செய்வது தவறு...
ReplyDeleteஅந்த ஊடகவியலாளர் கைது விடயம் இந்த அரசின் ஊடகங்கள் மீதான ஒரு அடக்குமுறையாக விளங்குகிறது...
அந்த ஊடகவியலாளர் தனது கடமையை சரியாக செய்ததால் தான் இது ஒரு கொலை என்ற உண்மை மக்களுக்கு தெரியப்படுத்த பட்டுள்ளது...
உண்மை நிலையை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஊடகவியலாளர்களை கைது செய்வதை விடுத்து....
பிக்குவுக்கு தீ வைத்து கொலை செய்தவனை கைது சித்து விசாரியுங்கள் பல உண்மைகள் விளிவரும்....