Header Ads



பாதிப்புக்குள்ளான முஸ்லிம் வாழும் கிராமங்களையும் உள்ளீர்க்க சுபைர் வேண்டுகோள்


(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

கிழக்கு மாகாணத்தில் ஜரோப்பிய ஒன்றியத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1000 வீடமைப்புத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் பாதிப்புக்குள்ளான முஸ்லிம் வாழும்  கிராமங்களையும் உள்ளீர்க்குமாறு கிழக்கு மாகாண சபையின் முன்னால் அமைச்சரும், தற்போதைய பிரதி தவிசாளருமான எம்.எஸ்.சுபைர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பீ.எஸ்.எம்.சார்ள்ஸிடம் வேண்டுகோளினை விடுத்துள்ளார்.

தற்போது வீடமைப்புத் திட்டம் நடை  முறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற போது முஸ்லிம்களையும் அதில் உள்வாங்குவதன் அவசியத்தையும் பிரதி தவிசாளர் அரசாங்க அதிபரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த யுத்த காலத்தில் இடம் பெயர்வுக்குள்ளான முஸ்லிம் வாழ்ந்த கிராமங்களான உருகாமம், கோப்பாவெளி, வில்லுமலை,உன்னிச்சை,காயங்குடா,காரமுனை,காவத்து முனை கிராமங்களையும் இந்த திட்டத்தில் உள்வாங்குமாறு பிரதி தவிசாளர் எம்.எஸ்..சுபைர் அரசாங்க அதிபரின் கவனத்தி்ற்கு கொண்டுவந்துள்ளார்.



No comments

Powered by Blogger.