பரகஹதெனிய இளைஞர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட இரத்ததான முகாம்
பரகஹதெனிய இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடுசெய்து நடாத்தப்பட்ட இரத்ததான முகாம் (BLOOD DONATION CAMPAIGN) இன்று சனிக்கழமை காலை 08.00 மணிமுதல் 16.00 மணிவரை பரகஹதெனிய தாய்சேய் சிகிச்சை நிலையத்தில் (MATERNITY CLINIC) இடம்பெற்றது.
பரகஹதெனிய இளைஞர் சங்கத்தின் 16வருட பூர்த்தியை முன்னிட்டு இவ்விரத்ததான நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மாவத்தகம பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் மற்றும் இரத்ததான வங்கியின் பங்களிப்புடன் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பரகஹதெனிய இளைஞர் சங்கத்தின் தற்போதைய மற்றும் முன்னையநாள் உறுப்பினர்கள் யுனானி வைத்திய நிபுணர் Dr.பஸ்லுல் ஹக் உட்பட இன்னும் பல சமூக நலன்விரும்பிகள் கலந்துகொண்டு தேவையான சகல வசதிகளையும் பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment