Header Ads



அம்பாறையில் ஜே.வி.பி. கையொப்பம் சேகரிக்கிறது (படங்கள்)



(இப்னு செய்யத்)

அம்பாறையில் 19-05-2013 இன்று காலை முதல் ஜே.வி.பியினர் திருக்கோயில் பிரதேசத்தில் மின்சாரக் கட்டணத்தைக் கண்டித்தும், மின்சாரக் கட்டணத்தைக் குறைக்குமாறும் வேண்டியும் கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டார்கள். அதேவேளை பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தார்கள்.

அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ (ஜே.வி.பி) தலைமையில் நடைபெற்ற இக்கையெழுத்திடும் வைபவத்தில் பொது மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஒப்பமிட்டார்கள்.

மக்களின் வாழ்க்கைச் செலவு நாளாந்தம் அதிகரித்துக் கொண்டு செல்லுகின்ற நிலையில் அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை பல மடங்கு அதிகரித்து மக்களின் சுமையை மேலும் அதிகரித்துள்ளது. இதனைக் கண்டித்து மினாரக் கட்டணத்தை குறைக்குமாறு அரசாங்கத்தை கோரும் இப்போராட்டத்தில் பொது மக்கள் அனைவரும் இணைந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு விநியோகித்த துண்டுப் பிரசுரத்தில் கேட்கப்பட்டுள்ளது.




No comments

Powered by Blogger.