உலகத்திலேயே சிங்கள இனத்தவர்கள் சிறந்து விளங்குகின்றனர் - அஸ்வர்
(TN) உலகத்திலேயே சிங்கள இனத்தவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.ஏனைய சமூகத்தினருடன் அந்நியோன்யமாகப் பழகக்கூடியவர்கள். இதனை வரலாற்றிலும் கண்டு கொள்ள முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினரும். பாராளுமன்ற பேரவை உறுப்பினருமான அல்ஹாஜ். ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.
ருவன்செல்லை தொகுதியல் கன்னத்தோடடை ரோஜா மண்டபத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யூ.எல்.எம் பாரூக் அறக்கட்டளை மூலம் இப்பகுதி வறிய மக்களுக்கு மூவாயிரம் மூக்குக் கண்ணாடிகளை இலவசமாக வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"தானம் வழங்குவதிலும் சிங்களவர்கள் பிரபல்யமானவர்கள் வெசாக் பண்டிகை காலங்களில் இதனை நாம் கண் கூடாக காணலாம். அரேபிய குடிமக்கள் இலங்கைக்கு வந்து சிங்களப் பெண்களை திருமணம் செய்துக் கொண்டதன் காரணமாகவே சன்மார்க்கத்தைப் பரப்பக்கூடிய ஒரு கட்டுக்கோப்பான முஸ்லிம் சமூகம் இலங்கையில் உருவாகியது.
அன்று வாழ்ந்த சிங்களவர்கள் காணி நிலம், இருப்பிடங்களை வழங்கி முஸ்லீம்களை மலைநாட்டிலும் ஏனைய பகுதிகளிலும் பாதுகாப்பாக வாழ வைத்தனர்.இன்றுள்ள சூழ்நிலையில் எமது முஸ்லிம்கள் இந்த வரலாற்று உண்மைகளை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.
எனவே கடந்த காலங்களை போன்று எதிர் காலத்திலும் பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்களை அரவணைத்து ஆதரவாக வாழ்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை எனவும் ஏ.எச்.எம்.அஸ்வர் ஹாஜி தெரிவித்தார்.

Pls aswer slience
ReplyDeleteMr. Aswar,
ReplyDeleteஆட்சியாளரோடும் பெரும்பான்மை இனத்தவரோடும் ஒத்தாசையாக இருப்பது வேறு அண்டிப்பிழைப்பது வேறு. ஆட்சியாளருக்கும் பெரும்பான்மை இனத்தவருக்கும் ஒத்தாசை புரிந்தவாறு நமது தன்மானத்தை விட்டுத்தராமல் உரிமைகளை கம்பீரமாக வென்றெடுப்பதற்குப் பதில் அவர்களை கைகளைப் பிடித்துக் கொஞ்சிக்கொண்டும் காலில் வீழ்ந்து கொண்டும் இருக்கவேண்டிய அவசியமில்லை.
இப்பதான் நீங்க சரியான ஒரு கண்டு பிடிப்ப கண்டு புடிச்சிரிக்கீங்க இந்த உண்மையை உள்ள படி சொன்னதுக்கு அஸ்வர் மாமாவுக்கு நோபெல் பரிசு இந்த வருஷம் நிச்சயம் கொடுக்கணும் வாழ்க உங்கள் சேவை
ReplyDeleteஇன்னும் உங்களிடமிருந்து இந்த மாதிரி நிறைய கண்டு பிடிப்ப எதிபார்க்கிறோம்
வெசக் தன்சல கொடுப்பதை வைத்து அவர்கள் தான தர்மம் கொடுப்பதில் சிறந்தவர்கள் என முடிவுக்கு வராதீங்க ஹாஜி. தன்சல நடத்துவது அவர்கள் தான். ஆனால் அதட்கான நிதி சேர்ப்பது (சற்று அதிகார ஹை பார்ட் பாணியில்) முஸ்லிம் கடைகளிலும் வீடுகளிலும் என உமக்கு தெரியுமா? அடுத்தவன் ஆட்டை அறுத்து உம்மா பேரில் கத்தம் தான் இந்த தன்சல.
ReplyDelete1983 MUZAL 2009 WARAIKKUM SINHALAWARHAL TAMILARHALODU MIHAVUM ANNIYONYAMAHAP PALAHINARHAL. IPPO MUSLIMGALODU MIHA MIHA ANNIYONYAMAHAP PALAHUHIRARHAL. WAALHA ASWAR MAAMA
ReplyDeleteஅரபிகள் இலங்கையில் sinhala பெண்களை மணந்தார்கள் என்பது வரலாட்டு ஆதாரம்தான் அறபு ருசி அவர்கள் நன்கு அறிவார்கள்.இப்போதும் என்ன வீட்டு பணிப்பெண்ணாக அரபியவுக்குப் போய் அனுபவிக்கிறார்கள்.அவர்கள் சர்வ தேசத்துக்கும் நன்றாக பழகக் கூடியவர்கள் அஸ்வர் எம் பி பொய் சொல்லி ஐஸ் வைக்க வில்லை.
ReplyDeleteஅஸ்வர் ஹாஜி! நீங்கள் வாய் திறந்தால் எமக்கு வேடிக்கை. உலகத்தையே சுற்றிவிட்டு வந்து இந்த அறிக்கையை விட்டுட்டீங்க. ஓகே.
ReplyDeleteஅப்படியென்றால் முஸ்லிம்கள்????? ஜனாதிபதி???? பாதுகாப்பமைச்சர்?????? பிபிஎஸ்?????
ஜனாதிபதியின் மடியில் வளர்ந்த குழந்தை தானே. இப்படிச் சொல்லாம எப்படித்தான் சொல்வீர்கள்?
arasaangam valarkum,nanriulla jeevan...
ReplyDeleteமியன்மாரில் உள்ளவர்கள் சிங்கள இனமாக இவருக்கு தெரியவில்லை போலும். பாவம் உலக அறிவு இல்லாதவர். குறிப்பாக இவருக்கு வாக்குகளை வழங்கிய அப்பாவி மக்கள் மிகவும் பாவம்.
ReplyDeleteSamad,
ReplyDeleteஇப்படி எழுதுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லை..?
இது உங்களது வக்கிரபுத்தியையும் ஆணாதிக்க குப்பை மனதின் அழுகல் முடைநாற்றத்தையும்தான் வெட்டவெளிச்சமாக்குகின்றது. கருத்துச் சொல்ல வந்துவிட்டு பிறசமூகத்தையும் அவர்களது பெண்களையும் அற்பமாக நினைக்கும் உயர்வுச் சிக்கல் எனும் சகதிக்குள் வீழ்ந்துவிடாதிர்கள்.