Header Ads



அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் - முக்கிய தலிபான் தளபதி வபாத்

ஆயுததாரிகள்  பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து வடக்கு பாகிஸ்தானின் மிரான்ஷா பகுதியில் காஷ்மா என்ற கிராமத்தில் ஒரு வீட்டின் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் 29-05-2013 ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தின.

 அதில், அந்த வீடு இடித்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி வீட்டில் தங்கியிருந்த 6 பேர் பலியாகினர். 2 பேர் காயம் அடைந்தனர்.

 இந்த தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தின் 2ம் கட்ட தலைவரான வலி-யுர்-ரஹ்மான் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விலி-யுர்-ரஹ்மான் இன்றைய அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் தலிபான்களுக்கு ஏற்பட்ட கடும் பின்னடைவாக கருதப்படுகிறது.

 கடந்த 11-ந்தேதி பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதன் பிறகு தற்போதுதான் முதன்முறையாக அமெரிக்காவின் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. 

No comments

Powered by Blogger.