15 வருடங்கள் தலையில் பென்சிலுடன் வாழ்ந்த ஆப்கான் இளைஞருக்கு சிகிச்சை

ஜெர்மனி தலைநகரில் உள்ள பெர்லின் மருத்துவமனைக்கு ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் கண்பார்வை குறைவாக இருப்பதாக கூறி கொண்டுவரப்பட்டார். அப்போது அவர் வலது கண் பார்வை குறைவு, தலைவலி, மூக்கில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சினைகள் இருப்பதாக கூறினார்.
அவரை அதிநவீன கம்ப்யூட்டர் ஸ்கேனிங் மூலம் மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது அவரது கழுத்தின் பின்புறத்தலையில் 7 சென்டி மீட்டர் நீளமுள்ள பென்சில் ஒன்று இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, 15 வருடங்களுக்கு முன் சிறுவயதில் தனது தலையில் பென்சில் குத்தியதை ஞாபகப்படுத்தி சொன்னார். அப்போதிலிருந்து தலைவலியும், மூக்கில் ரத்தம் வடிவதாகவும் அவர் கூறினார்.
பிறகு அறுவை சிகிச்சையின் மூலம் அந்த பென்சில் அகற்றப்பட்டது. இருந்தும் அவரது கண் பார்வை குறைவை சரிசெய்யமுடியவில்லை.
Post a Comment