பரீட்சை உரிமையை பாதுகாத்து தருமாறு வலியுறுத்தி 4 மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்
வகுப்பு தடை விதிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைகழகத்தை சேர்ந்த நான்கு மாணவர்களது உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்து முன் எடுக்கப்படுகின்றது.
இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்வதாக சப்ரகமுவ பல்கலைகழக மாணவ ஒன்றிய ஊடக பேச்சாளர் ரவீந்திர புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
வகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவர்களது பரீட்சை உரிமையை பாதுகாத்து தருமாறு கோரியே இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முன் எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கான, உரிய நடவடிக்கையை பல்கலைகழக நிர்வாக சபையினர் மேற்கொள்ளாத விடத்து சாகும்வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் முன் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment