Header Ads



யாழ்ப்பாணக் குடாநாட்டில் குடிநீருக்கு நெருக்கடி ஏற்படலாம் – ஆய்வாளர் தெரிவிப்பு

யாழ்ப்பாண குடாநாட்டில் நிலத்தடி நீரின் பயன்பாடு மிகையாக உள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள யாழ்ப்பாணத்தின் பிரதான நீர்வளமான நிலத்தடி நீரின் பாவனை அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

"யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீரின் பயன்பாடானது சமநிலையற்றுக் காணப்படுவதால் எதிர்காலத்தில் இங்கு நீரைப் பெற்றுக் கொள்வதில் நெருக்கடி நிலை ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது" என யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய திணைக்களத்தைச் சேர்ந்த, இந்த ஆய்வை மேற்கொண்ட இரண்டு துறைசார் ஆய்வாளர்களில் ஒருவரான சாந்தி டீ சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இந்த ஆய்வு தொடர்பான விளக்கக்காட்சி ஒன்றின் போதே யாழ்ப்பாணத்தில் தற்போது நிலத்தடி நீர் மிகையாகப் பயன்படுத்துவது தொடர்பாக விளக்கப்பட்டது. "நீருக்கான கேள்வி தற்போது அதிகரித்துள்ள நிலையிலும் நீர்நிலைகளின் நீர்மட்டம் போதியளவில் அதிகரிக்கவில்லை. மழைவீழ்ச்சி மிகக் குறைவாகக் காணப்படுவதால் நீர்நிலைகளில் நீர் காணப்படவில்லை" என 2012 டிசம்பரில் வெளியிடப்பட்ட 'வெப்பமண்டல விவசாய ஆராய்ச்சி' அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

"இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படுவதால் முன்னைய போர் வலயத்தில் நிலத்தடி நீருக்கான கேள்வி அதிகரித்துள்ளது. ஆனால் இந்த நீரைப் பயன்படுத்துவதில் சமநிலை பேணப்படவில்லை. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நகர்வுகளை மேற்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் நீருக்கான நெருக்கடிநிலையைக் குறைக்க முடியும்" என குசும் அத்துக்கொறல மேலும் தெரிவித்துள்ளார். 

ஆண்டுதோறும் பெறப்படும் நீரின் 50 சதவீதத்தை சேமித்து வைப்பதன் மூலம் நீர்ப்பயன்பாட்டில் சமநிலையைப் பேணமுடியும் என நீரியற்துறை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீரானது விவசாயம், வீட்டுத் தேவை மற்றும் நீர்வழங்கல் போன்வற்றுக்காக பிரதானமாகப் பயன்படுத்தப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.