Header Ads



ஹலால் இலச்சினை கைவிடப்பட்டதற்கு ஐக்கிய தேசிய கட்சி வரவேற்பு


ஹலால் இலச்சினை கைவிடப்பட்டமையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி வரவேற்றுள்ளது. இந்த அறிவிப்பினை ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கொண்டார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்படப்பட்டார்.

நாட்டிலுள்ள சமூகங்கள் மத்தியில் நல்லெண்ணம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை சிறந்தது என அவர் குறிப்பிட்டார்.

இந்த தீர்மானத்தினை முன்னர் மேற்கொண்டிருந்தால் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட பதற்றத்தினை தவிர்த்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன் ஊடாக சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் புரிந்துணர்வு மீண்டும் கட்டியொழுப்பப்படும் என ஐக்கிய தேசிய கட்சி நம்புவதாக திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்தார். Tm

3 comments:

  1. விஸயம் நடந்து முடிந்து வாரம் 1 ஆகப்போகுது நீங்க எங்கசார் இருந்தீங்க, ஐயா ரணில்வக்ரம சுருங்க ஆளக்காணம், அரசாங்கம் பகிரங்கமா முஸ்லிம்களிடம் மன்னிப்புக்கோரணும் என்றெல்லாம் சொன்னாரே.

    ReplyDelete
  2. இவ்வளவு காலமும் மதில் மேல் இருந்திங்க இப்ப அங்கால பாஞ்சிட்டியல். அப்பவாவது சொல்லிட்டிங்க எல்லாரும் ஒரே குட்டையில் ஊறினவங்கதான் என்பத .நன்றி....... வருவிங்க பிச்ச கேட்டு . வாங்க வரவேட்கிறோம்.

    ReplyDelete
  3. எங்கிட பொம்புளப் புள்ளயள் போடுற உடுப்பு விஷயத்தையும் அவங்க சொல்லுறாப்போல இப்பவே உட்டுப்போடவா!.

    ReplyDelete

Powered by Blogger.