Header Ads



இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் குறித்த பதிவுகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும்



(மஸிஹுதீன் இனமுல்லாஹ்) 

இஸ்லாத்தின் வருகைக்கு முன்பிருந்தே இலங்கையில் அரேபிய வம்சாவளியினர் இருந்திருக்கின்ரனர். பட்டுப்பாதை எனும் மேற்காசியாவிலிருந்து கிழக்காசியா (சீனா)  வரையிலான சர்வதேச கடல் வழி வணிப பாதையை மேற்கில்  அரபிகளும் கிழக்கில் தமிழர்களும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்ததனால் அரபு தமிழ் உறவு மேலோங்கியிருந்தது.

கேரளா மற்றும் தமிழ் நாட்டுடன் மாத்திரமன்றி இலங்கையில் ஆரிய சிங்களவர்களின் வருகைக்கு முன்பிருந்தே இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளை  அரபிகள் கொண்டிருந்தனர். ஆரிய சிங்களவர்களின் வருகையோடு அவர்களோடும் அரபு வணிகர்கள் நல்லுறவை வளர்த்துக் கொண்டனர்.

அரபிகள் ஆரிய சிங்களவர்களின் வருகைக்கு முன்னர் தென்னிந்தியாவிலும் இலங்கயிளுமிருந்த திராவிடர்களோடு கொண்டிருந்த வர்த்தக உறவு நாளடைவில் திருமண மற்றும் குடும்ப பந்தமாகவும் பரிணாமம் பெற்றிருக்கின்றது.

அதனால் தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கின்றார்கள், இலங்கை முஸ்லிம்களது தமிழ் மொழி பிரயோகங்கள் கூட சங்ககால தமிழினையும் மலையாள பிரயோகங்களையும் கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகிறது.

எமது தாய்மாரின் மொழி தமிழாகவும் இருந்ததோடு மாத்திரமல்லாது  எங்களுக்கு அரபுத் தமிழ் எனும் தனித்துவமான ஒரு மொழி வழக்கு கூட இருந்திருக்கின்றது.

இஸ்லாத்தின் வருகையோடு இஸ்லாத்தில் நுழைந்த அரபிகளும் தமிழர்களும் குறிப்பாக தாய்மார்களும் முஸ்லிம்களின் பூர்வீகத்தின் வேர்களாக இருந்திருக்கின்றனர்.

சிங்கள ஆரியர்களின் வருகைக்கு முன் இலங்கையில் இருந்த தமிழர்களும் அரபிகளும் மத ரீதியான பந்தத்திலும் தங்களை இணைத்துக் கொண்டதன் மூலமே இலங்கை முஸ்லிம்கள் என்ற தனித்துவமான குழுமம் தோற்றம் பெற்றிருக்கிறது.

வரலாற்றில் ஒல்லாந்தரின் ஆங்கிலேயரின் வருகையோடு எவ்வாறு சிங்கள  தமிழ்  கிறிஸ்தவர்கள் தோற்றம் பெற்றார்களோ அதேபோன்று அரபு தமிழ் முஸ்லிம்கள் இலங்கையில் தோற்றம் பெற்றிருக்கின்றார்கள்.

இலங்கை முஸ்லிம்கள் சகலரும் அரபு அல்லது அரபு  சிங்கள பூர்வீகத்தை கொண்டவர்கள் என்ற வரலாற்று ஆய்வுகள் மீள்பரிசீலனைக்கு உற்படுத்தப் பட வேண்டும்.

இலகையில் பௌத்தம் கிறிஸ்தவம் இஸ்லாம் ஆகிய மதங்களின் வருகைக்கு முன்னரே அரபு திராவிட கலப்பு வர்த்தக சமூகம் ஒன்று இந்த  நாட்டில் இருந்திருக்கிறது அவர்கள் மொழியாலும், கலாச்சாரரத்தலும் , பண்பாடுகளாலும் பின்னிப் பிணைந்து இருந்தது போல திருமண பந்தம் மற்றும் மத பந்தத்திலும் ஒன்றிணைந்து கொண்டனர்.

சோனகர்கள் (சுவனர்கள் ) தமிழர்களா என்ற கேள்விகளோடு பல ஆய்வுகளும் அங்காங்கே தமிழர்களாலும் முஸ்லிம்களாலும் மேற்கொள்ளப் பட்டிருந்தாலும் அவை முழுமையான நடுநிலமையான ஆய்வுகளாக இன்னும் வெளி வரவில்லை என்பதே உண்மையாகும்.

இலங்கையில் முஸ்லிம்களது பூர்வீகம் மிகவும் விரிவாக ஆழமாக பல்வேறு பரிமாணங்களில் ஆராயப் பாடல் வேண்டும் ,  பல்கலைக் கழக முஸ்லிம் சமூகத்தினையும் அதிலும் குறிப்பாக தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்று பீடமும் இந்த துறையில் முனைப்பான ஆய்வு முயற்சிகளில் இறங்க வேண்டும்.

1 comment:

Powered by Blogger.