ஹிஜாபுடைய விடயத்தில் முதலில் நாம் தெளிவடைவோம்...!
(ஹாரிஸ் ரஷாதி)
அடுத்து எமது இலக்கு ஹிஜாப் என்று கூறப்படுவதை நாம் ஊடகங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. அல்லாஹ் பாதுகாப்பானாக!. முதலில் முஸ்லிம்களாகிய நாம் ஹிஜாபில் தெளிவடைதல் வேண்டும். பெண்கள் முகத்தை மூடுவது தேவையில்லை என்ற கருத்து சிலரிடம் உள்ளது. இவ்விடயத்தில் இமாம்களிடமும் கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால், இவையெல்லாம் எமக்கு மத்தியில்தான் இருக்கவேண்டும். பல கருத்துக்கள் இருந்தாலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, பெண்கள் மஹ்ரம் இல்லாத ஆண்களுக்கு முன்னால் முகத்தை மூடவேண்டும் எனும் கருத்தையே கொண்டுள்ளது என்பதை அதன் பத்வாவின் மூலம் நாம் அறிவோம்.
இந்நிலையில், மாற்றுக் கருத்துகள் எம்மிடம் இருக்கலாம். ஆனால், முகத்தை மூடும் ஒரு பெண்மனியை தனது முகத்தை திறக்கவேண்டும் என கூறுவதற்கு யாருக்கும் எவ்வித அதிகாரமும் இல்லலை. முகத்தை மூடுவது எமது மார்க்கம். அது எமது உரிமை.
எனவே, எதிரிகளுக்கு முன்னால் எம்மை, எமது மார்க்கத்தைக் காட்டிக் கொடுக்கும் வேலைகளில் எமது முஸ்லிம்கள் ஈடுபடமாட்டார்கள் என இந்நாட்டு முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஏற்கனவே இதை நாம் உணர்ந்துவிட்டோம். எமது எதிரிகள் எம்மை பயன்படுத்தியே எமக்கு ஆப்பு வைக்க நாடியுள்ளார்கள். சமகாலத்தில் செய்தும் காட்டியுள்ளார்கள். எனவே, எனது அன்பின் முஸ்லிம்களே, காட்டிக்கொடுப்பின் ரணத்தை இப்பொழுது நாம் மென்றுகொண்டிருக்கின்றோம். வேண்டாம் இனி இந்தக் காட்டிக்கொடுப்பு. எமக்கு ஹிஜாபைப் பற்றிய அறிவு இல்லையென்றால் ஆலிம்களை அணுகுவோம். ஆதாரங்களைக் கேட்போம். தெளிவடைவோம். ஊடகங்கள் மாற்றுக்கருத்துடையவர்களை அணுகலாம். ஜாக்கிரதையாக இருப்போம். செய்த தவறை மீண்டும் செய்யாமல் இருப்போம்.

very good please use our Mimbers (Jum-Aa) to educate the community on these matters
ReplyDeleteஹிஜாப் இற்கு எதிராக அவர்கள் எதுவும் பேசுவதற்கு அவர்களுக்கு எதுவித உரிமையும் இல்லை. அத்துடன் அவர்கள் ஹிஜாப் சம்மந்தமாக எதுவித கருத்துகள் வைத்தாலும் அதை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது, ஏற்றுக்கொண்டால்தானே விட்டுக்கொடுப்பதா இல்லையா என்பது பற்றி யோசிப்பதற்கு இன்ஸாஅல்லாஹ் இறைவன் நம் முஸ்லிம் உம்மத்தைகாப்பாற்றவேண்டும்,
ReplyDeleteஅதையும் தாண்டி யாராவது புரட்சிகள் போராட்டங்கள் என்று ஆரம்பித்தால் அது அவர்களின் அழிவுக்கான ஆரம்பமாகத்தான் அமையும். நாட்டுக்காக நாட்டுக்காக என்று நாம் ஒவ்வொன்றாக செய்து வருகின்றோம் அவர்கள் நமது முஸ்லிம்கள் சம்மந்தப்பட்ட சரித்திரக்கதைகளையே அழிக்கவேண்டுமென்று எண்ணி செயற்படுகின்றார்கள் இப்படியிருக்கும் போது இனியென்ன நாட்டுக்கு எண்று நாம் நம்மையே ஏமாற்றிக்கொள்வது..
ஜ.உ.சபை நீங்கள் கூறுவது போன்று பெண்கள் முகத்தை மூடவேண்டும் என்ற பத்ஆ கூறியிருந்தால் புன்னாக்கு ஜ.உ.செய்த தவறுகள் தான் இலங்கையில் இன்று முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு காரணமாகும் குர்ஆனையும் ஹதீஸையும் தூரத்தில் வைத்து விட்டு வழஜகாட்டல்+தீர்ப்புகள் செய்தமைதான் இலங்கையில் இன்று முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு காரணமாகும்.
ReplyDeleteதேசிய ஐக்கியத்திற்க்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ள பொதுபல சேனாவினை அரசாங்கம் உடனடியாக தடைசெய்து தேசிய ஒற்றுமைமைக்கு வழிவகையினை ஏற்படுத்த வேண்டும்
ReplyDeleteTo protect ladies, gens lets put cap. It will support them while they are in out.
ReplyDeleteஇதட்கும் சில சமயம் ACJU இது ஹுதைபிய உடன்படிக்கைக்கு ஒப்பானது நாம் பொறுமையை கடைபிடிப்போம் ! நாம் தோற்றுப்போகவில்லை என்று சொன்னால் என்ன பதில் சொல்ல போகிறீர்கள் !!!!
ReplyDeleteyes allah amakku udawuwan...allah miha periyawan..
ReplyDeleteQURAAN SUNNAH VIL IRUNTHU NAAM VALI THAVARUM POTHU ( HALAAL VIDAYAM PONRU ) ITHU MATHIRY ( MATTRU MATHATTAVARIN ALUTTHAM ATHIHARIPPATHIL AACHARYAM ILLAI )
ReplyDelete