சென் அந்தனிஸ் மகளிர் மஹா வித்தியாலய இஸ்லாமிய தின நிகழ்வு
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
கொழும்பு-03 சென் அந்தனிஸ் மகளிர் மஹாவித்தியாலய இஸ்லாமிய தின நிகழ்வு செவ்வாய்க்கிழமை 12-3-2013 கல்லூரி அதிபர் சகோதரி எம்.சொனாலி ஏ.சி தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது. முஸ்லிம் மஜ்லிஸ் பொறுப்பாசிரியை திருமதி ஸீனத் காதரின் ஏற்பாட்டில் இஸ்லாமிய தின நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
பிரதம அதிதியாக கல்வி அமைச்சின் முன்னால் பிரதிப்பணிப்பாளர் திருமதி பரீதா வஹாப் கலந்து கொண்டு இஸ்லாமிய தின நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதன்போது மாணவிகளின் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.






கடைசியா உள்ள புகைப்படம் இங்கு என்ன கற்றுக்கொடுக்கப்படும் என்பதை காட்டுகிறது.முஸ்லிம்களே! தவிர்க்கப்படவேண்டியது எம்மில் நிறைய இருக்கிறது,சிந்தியுங்கள்!!! சிந்திக்காத சமூகமாக இருந்து சீரழிந்து போகாதிருப்போம்.
ReplyDelete