கண்டி வைத்தியசாலைக்கு முஸ்லிம் தனவந்தர் உதவி (படங்கள்)
(ஜே.எம்.ஹபீஸ்)
இலங்கையிலுள்ள பிரதான போதனா வைத்திய சாலைகளில் ஒன்றான கண்டி பெரியாஸ்பத்திரியின் 16ம்.17ம் விடுதிகளை திருத்தி அமைக்க மடவளை மட்டும் கட்டுகாஸ்தோட்டை என்பவற்றில் இயங்கும் சமீர் என்டபிரைஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. அதற்கான காசோலையை கண்டி வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டப்ளியூ. ஜி.ஏ. திசாநாயக்கா விடம் சமீர் என்டபிரைஸ் நிறுவன தலைவர் முஹம்மட் றிஸ்னி மஹ்றூப் கையளிக்கும் போது எடுக்கப்பட்ட படம். படத்தில் வைத்திய கலாநிதி ஏ.ஹம்தானி (சிரேஸ்ட விடுதிப் பொறுப்பாளர்), சிசேட சத்திர சிகிட்சை நிபுணர் வைத்திய கலாநிதி எஸ்.எம்.எம். நியாஸ்,டெல்மேஜ் ஹெல்கெயார் நிறுவன வைத்திய பிரதிநிதி ஹில்மி ஹனீபா, உற்பட மற்றும் பலர் படத்தில் காணப்படுகின்றனர்.

Post a Comment