மெல்சிரிபுர முஸ்லிம்களிடையே பதற்றம் - பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்கிறது பொலிஸ்
(இ. அம்மார்)
குருநாகல் மாவட்டத்தில் மெல்சிரிபுர நகரில் நாளை ஞாயிற்றுக் கிழமை முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தின் முன்னோடியாக தற்போது நகரில் கொடிகள் போடபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொடிகள் போடப்பட்டுள்ளதனால் நாளை என்ன நடக்கும் என்ற பதற்ற நிலை முஸ்லிம் மக்களிடையே தோன்றுகிறது. இந் நகரில் முஸ்லிம்களுடைய கடைகள் சுமார் 32 அளவில் உள்ளன.
இது குறித்து குருநாகல் மாவட்ட ஸ்ரீ சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தாரிடம் வினவிய போது இந்தச் சம்பவம் தொடர்பாக குருநாகல் சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் சுசில் டி த சில்வாவிடம் தான் முறைப்பாடு தெரிவித்துள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் முஸ்லிம்களுக்கு எதிராக எந்த ஆர்ப்பாட்டப் பேரணியையும் நடத்த விடப்போவதில்லை எனவும் நகருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் எனவும் தன்னிடம் கூறியதாக அப்துல் சத்தார் தெரிவித்தார்.
.......................................................................................
குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம பிரதேச செயலாளர் பிரிவில் பானகமுவ என்கின்ற பகுதியில் இனந்தெரியாத தீய சக்திகளால் உடமுல விஹாரைக்குச் செல்லும் சந்தியில் அமைந்துள்ள விஹாரையின் விளம்பரப் பதாதையை இன்று அதிகாலையில் உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் கூடுதலாக வாழ்கின்றனர். இந்தச் செயலைச் செய்து விட்டு தீய சக்திகள் முஸ்லிம்கள் மீது பலியைப் போடுவதற்காகச் செய்திருக்கலாம் என்கின்ற சந்தேகம் இந்தப் பிரதேச முஸ்லிம்களின் மத்தியில் எழுந்துள்ளன. இது குறித்த மேலதிக விசாரணைகளை ரம்பொடகல்ல பொலிஷஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

எந்த சமூகம் தீவிரவாதத்தை கையில் எடுக்கிறதோ அந்த சமூகத்துக்கு தீவிரவாதத்தால்தான் அழிவு.
ReplyDelete