ஹலால் விடயம் விட்டுக்கொடுக்கப்படவில்லை - அடித்துக்கூறுகிறார் றிஸ்வி முப்தி
வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்திகளுக்கு மட்டும் ஹலால் சான்றிதழ் என்ற தீர்மானத்தின் ஊடாக ஹலாலை விட்டுக்கொடுக்கவில்லை. முன்னர் ஹலால் சான்றிதழ் கட்டாயம் பொறிக்கப்பட வேண்டும் என இருந்தது. எனினும் தற்போது அவ்வாறில்லை. விரும்பினால் மாத்திரம் ஹலால் சான்றிதழை பெற முடியும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தெரிவித்தார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
இதன் மூலம் ஹலால் விடயம் விட்டுக்கொடுக்கப்படவில்லை. ஹலால் விடயம் பாரியதொரு பிரச்சினையாக என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கு காணப்படவில்லை. எனினும் சமூகங்களுக்கு மத்தியில் பாரிய பிரச்சினையாக காணப்பட்டது.
இந்த பிரச்சினை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பாரிய அழுத்தங்களுக்கு முகம் கொடுத்தன. இந்த அழுத்தங்களை கருத்திற்கொண்டு அவசரமான முடிவொன்றை எடுக்க நேரிட்டது. இதனாலேயே அவசரமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் இந்த அமைச்சரவை உப குழுவில் ஹலால் தொடர்பில் மாத்திரம் அறிக்கை சமர்ப்பிக்காது. அது ஹலால் உட்பட சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயவுள்ளது. இதனால் இந்த குழுவிடம் எமது ஹலால் தொடர்பான தீர்மானமும் சமர்ப்பிக்கப்படும்
இந்த ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை இலங்கைக்காக மாத்திரம் வழங்கவில்லை. சுமார் 65க்கு மேற்பட்ட நாடுகளுக்காகவே நாங்கள் வழங்குகின்றோம். தற்போது நாட்டில் காணப்படும் ஒற்றைமை ,மனிதநேயம், நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு பங்களிப்பு செய்யும் வகையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமாதானமும் இன நல்லுறவும்மிக்க இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் நாம் சில விட்டுக் கொடுப்புக்களையும் தியாகங்களையும் செய்ய வேண்டியது அவசியம்.இதன் அடிப்படையிலேயே உலமா சபை இவ்வாறானதொரு தீர்மானத்திற்கு உடன்பட்டதாகும்.
So, Halal only for foriegners and not for Muslims in Sri Lanka. Jayaveva Bodu Bala Sena.
ReplyDeleteஅப்போ பொருள் வாங்கும் போது நாங்கள் எப்படி இது ஹலாலா இல்லையா என்று அறிந்து கொள்வதாம்?
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅல்ஹம்துளில்லாஹ்! எவருக்கும் இதை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
நாட்டில் அனேகமான உணவு பாணங்களில் மனித உடளுக்கு கேடு விளைவிக்கின்றவைகள் அதிகமாக இருக்கும் இக்கால கட்டத்தில் அவைகளை தேடவோ, தடை செய்யவோ எந்த ஒரு பBல சேனவும், ஹெல உருமையும் உருவெடுக்கவுமில்லை அவைகளுக்கு எதிராக போராடவுமில்லை. எனவே இவர்களின் போலி நாடகத்துக்கு அடிபனியவும் தேவையில்லை.
Halal is our relegion. Not a traditional thing. V can't give up it for any reason. Bladdy members of Jammiyathul ulama...
ReplyDeleteஹலாலுக்கு புதிய ஒரு அர்த்தம் கொடுத்துவிட்டதாகவே உணருகின்றேன். ஹலால் என்பது முஸ்லிம்களுக்காக அல்ல நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவே இது ஜம்இய்யத்துல் உலமாவின் நிலை?
ReplyDeleteமுப்தி அவர்களே, பயங்கரவாத புர்காவைத் தடை செய்யப் போகின்றார்களாமே! கேள்விப்பட்டீர்களா!
ReplyDeleteகத்னா செய்வது சிறுவர்களின் மனித உரிமையைப் பாதிக்கின்றதாமே! ஒரு ஆண் வளர்ந்து 18 வயதானதும் தனக்குத் தேவையெனில் மாத்திரம் கத்னா செய்து கொள்ளட்டுமாமே!
இலங்கையில் இருப்பவர்கள் தமது குழந்தைகளுக்கு கத்னா செய்யத் தேவையில்லை, வெளிநாட்டவர்கள் அதனைச் செய்து கொள்ளட்டும் என்று சான்றிதழ் வழங்குவீர்களோ!
ஜெனீவாவுக்குப் போய் “இலங்கையில் சிறுபான்மையினருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, அவ்வாறு வந்தாலும் அதனை நாங்கள் எங்களுக்குள் தீர்த்துக் கொள்கின்றோம், இலங்கையின் ஜனாதிபதி எங்களுடன் இருக்கின்றார், அவரை எதிர்த்து வாக்களிக்காதீர்கள்” என்று அரபு நாடுகளிடம் நீங்கள் சொல்லிவிட்டு வந்தது இதைத்தானா?
Ok, How can We eat without halaal whether we are Muslim?
ReplyDeleteஇஸ்லாமிய நண்பர்களே!
ReplyDeleteஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது பெருமானார் முஹம்மது (ஸல்)
அவர்கள் மேற்கொண்ட தீர்க்க தரிசனமான விட்டுக்கொடுப்பினை
புரிந்து கொள்ளாமல் ,
உமர் (ரழி) அவர்கள் நடந்து கொண்டதை போல்,
இன்று நாம் நடந்து கொள்ள கூடாது.
எங்களுக்குடைய உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
உணர்வுகள் நசுக்கப் படுகின்றன
அதற்காக உணர்ச்சி வசப்படுவதாலோ ,அவசரப்படுவதாலோ
ஆன பலன் ஒன்றும் இல்லை .
எமது அறிஞர்களின் தீர்மானங்களை விமர்சிக்காதீர்கள்.
பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் சமூகத்திற்காக பாடுபடும் அந்த
தியாகிகளை சோர்வடைய செய்து விடாதீர்கள்,
இந்த இக்கட்டான நிலையில் சமூகத்தினை பிளவு படுத்தி விடாதீர்கள்.
ஜம்மிய்யதுல் உலமாவின் தீர்மானத்தினை ஏற்போம் ,
பிரிந்து விடாமல் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுவோம்.
ஓரணியின் கீழ் நின்று ஒற்றுமையாக் செயற்படுவோம் ,
நிச்சயமாக கூட்டமைப்பில் தான் வெற்றி உண்டு.
சகோதரர்களே!
பொறுமையும் , தொழுகையும் கொண்டு இறைவனிடத்தில்
உதவியினை கோருவோம்.
இறைவா, இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை போன்று
எங்களையும் பொறுமையாளர்களாக ஆக்கி வைப்பாயாக !
Yes brother Nijah, You are right. May Allah help us.
ReplyDeleteneegkaluma emalikal intha samuthayaththai yar kapparruvathu ellaththukkum vilakkam kodukkuka ugkalal maddumthan mudiyum
ReplyDeleteOk Nijah,
ReplyDeleteஅப்படியானால், முதலில் இஸ்லாதில் இல்லாத இந்த புர்க்கா (முகத்தை மூடுதல்) அதை ஏன் இன்னும் ஜெம்மியத்துல் உலமாவால் தடுக்கவோ, அல்லது அது தவரு என்றோ சொல்ல முடியவில்லை.
அல்குர்ஆனில், ஹதீசிலும் உள்ள படி பெண்களுக்கு ஆடை அனிய சொல்லாமல். ஏன் முகத்தை மூடும் இயக்கங்களுக்கு சபோட் பன்னுவது?
பித்ஹத்கள் மளிந்து கிடக்கும் இக்காலத்திலும் ஏன் ஜெம்மியத்துல் உலமா அவைகளை ஆதரிப்பது? அவைகளுக்கு என்ன தீர்பு வலங்கினார்கள்? அங்கையும் ஒற்றுமை என சொல்லி அவைகளையும் வளர்தார்களே தவிர ஒளிக்க பாடுபடுவதில்லை.....
ஜெம்மியத்துல் உலமாவுக்கு குர்ஆன் தேவையில்லை, நாட்டின் ஒற்றுமை தான் மிக முக்கியம்.
ஜெம்மியத்துல் உலமாவுக்கு ஹதீஸ் தேவையில்லை, ஊராரின் ஒற்றுமை தான் மிக முக்கியம்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடைய ஹலால் தொடர்பான இந்த தீர்மானம் வரவேற்கத்தக்கது. இது தொடர்பில் சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். FACEBOOK இலும் ஏனைய வலையமைப்புகளிலும் எமது நண்பர்களின் காரமான கருத்துக்கள் பதிவாவதை காண்கிறோம். இவை ஈமான் உள்ள ஒவ்வொருவருடைய உள்ளத்திலிருந்தும் வரக்கூடிய இஸ்லாத்தின் மீதுள்ள பற்றாகும் என்பதோடு எப்போதும் ஹலால் உணவையே உண்ணவேண்டும் என்பதின் வெளிப்பாடுமாகும். உண்மையில் இதை நாம் மதிக்கிறோம்.
ReplyDeleteநாம் முஸ்லீம்கள். வஹியை பூரணமாக ஏற்றுக்கொண்டவர்கள். ஹுதைபியா உடன்படிக்கை பற்றி எல்லோருக்கும் தெரியும். வெளித்தோற்றத்தில் பார்த்தால் முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த பிரயோசனமும் இல்லாத வெறும் வெற்று கடதாசியாகத்தான் தெரிகிறது. ஆனால் அல்லாஹ், நீங்கள் மகத்தான வெற்றியின் மீது இருக்கிறீர்கள் நபியே என்று குர்ஆன் ஆயத் இறக்கினான். இந்த விஞ்ஞானத்தை புரிந்துகொள்ள முடியாமல் உமர் போன்ற உறுதியான சஹாபாக்களையும் தடமாற வைத்ததுதான் இந்த உடன்படிக்கை. யோசித்துப்பார்த்தால் புத்திக்கு எந்த ஒரு நலவையும் காண முடியாதுள்ளது. இறுதியில் வெற்றி பெற்றது முஸ்லீம்கள்தான்.
இவ்வாறு இன்று நமக்கு கிடைத்திருக்கும் ஹலால் தொடர்பான முடிவும் இதே நிலைப்பாட்டில்தான் நோக்கப்பட வேண்டும். உலமாக்களும் ஏனைய துறை சார் புத்தி ஜீவிகளும் சேர்ந்து மஷூரா அடிப்படையில் பெறப்பட்ட முடிவுதான் இதுவாகும். இது விமர்சிப்பதற்குரியதல்ல. பொறுமையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் மஷூரா என்பது வஹியின் ஒரு பகுதியாகும். வெளித்தோற்றம் ஏற்க முடியாமலிருந்தாலும் இதன் பின்னால் உள்ள நலவை அல்லாஹ்வே நன்கறிந்தவன். எனவே உலமாக்களுக்கு உதவியாக இருப்பதும் அவர்களின் முடிவுகளுக்கு கட்டுப்டுவதும் அவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதும் இன்றைய காலத்தின் மிகத்தேவையாகும். ஒவ்வொருவருடைய விமர்சனங்களும் இந்த சமூகத்தின் மீது துஆவாக வெளிப்ப்டுமாக இருந்தால் அதுவே எமக்குரிய வெற்றியாகும்.
உள்நாட்டு சந்தையில் ஹலால் இலட்சினை பொறிக்கப்படாத பொருட்களை எவ்வாறு ஹலால் உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சிறந்த வழிகாட்டலை தரவேண்டும் என்பது எமது வேண்டுகோளாகும்.
Safeer ahamath....
DeleteUr right....i accept ur suggection..
Im totaly agree with Nijas
ReplyDeleteI'm totally agree with nijas
ReplyDeleteதலை உள்ள தலைமைத்துவம் வேண்டும்
ReplyDeleteஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடைய ஹலால் தொடர்பான இந்த தீர்மானம் வரவேற்கத்தக்கது. இது தொடர்பில் சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். FACEBOOK இலும் ஏனைய வலையமைப்புகளிலும் எமது நண்பர்களின் காரமான கருத்துக்கள் பதிவாவதை காண்கிறோம். இவை ஈமான் உள்ள ஒவ்வொருவருடைய உள்ளத்திலிருந்தும் வரக்கூடிய இஸ்லாத்தின் மீதுள்ள பற்றாகும் என்பதோடு எப்போதும் ஹலால் உணவையே உண்ணவேண்டும் என்பதின் வெளிப்பாடுமாகும். உண்மையில் இதை நாம் மதிக்கிறோம்.
ReplyDeleteநாம் முஸ்லீம்கள். வஹியை பூரணமாக ஏற்றுக்கொண்டவர்கள். ஹுதைபியா உடன்படிக்கை பற்றி எல்லோருக்கும் தெரியும். வெளித்தோற்றத்தில் பார்த்தால் முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த பிரயோசனமும் இல்லாத வெறும் வெற்று கடதாசியாகத்தான் தெரிகிறது. ஆனால் அல்லாஹ், நீங்கள் மகத்தான வெற்றியின் மீது இருக்கிறீர்கள் நபியே என்று குர்ஆன் ஆயத் இறக்கினான். இந்த விஞ்ஞானத்தை புரிந்துகொள்ள முடியாமல் உமர் போன்ற உறுதியான சஹாபாக்களையும் தடமாற வைத்ததுதான் இந்த உடன்படிக்கை. யோசித்துப்பார்த்தால் புத்திக்கு எந்த ஒரு நலவையும் காண முடியாதுள்ளது. இறுதியில் வெற்றி பெற்றது முஸ்லீம்கள்தான்.
இவ்வாறு இன்று நமக்கு கிடைத்திருக்கும் ஹலால் தொடர்பான முடிவும் இதே நிலைப்பாட்டில்தான் நோக்கப்பட வேண்டும். உலமாக்களும் ஏனைய துறை சார் புத்தி ஜீவிகளும் சேர்ந்து மஷூரா அடிப்படையில் பெறப்பட்ட முடிவுதான் இதுவாகும். இது விமர்சிப்பதற்குரியதல்ல. பொறுமையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் மஷூரா என்பது வஹியின் ஒரு பகுதியாகும். வெளித்தோற்றம் ஏற்க முடியாமலிருந்தாலும் இதன் பின்னால் உள்ள நலவை அல்லாஹ்வே நன்கறிந்தவன். எனவே உலமாக்களுக்கு உதவியாக இருப்பதும் அவர்களின் முடிவுகளுக்கு கட்டுப்டுவதும் அவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதும் இன்றைய காலத்தின் மிகத்தேவையாகும். ஒவ்வொருவருடைய விமர்சனங்களும் இந்த சமூகத்தின் மீது துஆவாக வெளிப்ப்டுமாக இருந்தால் அதுவே எமக்குரிய வெற்றியாகும்.
உள்நாட்டு சந்தையில் ஹலால் இலட்சினை பொறிக்கப்படாத பொருட்களை எவ்வாறு ஹலால் உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சிறந்த வழிகாட்டலை தரவேண்டும் என்பது எமது வேண்டுகோளாகும்.
ameen
ReplyDeleteயா அல்லாஹ்!!!! நீயே மிக அறிந்தவன். நீயே ஞானம் மிக்கவன். மறைவானவற்றை பற்றிய தீர்கமான அறிவுள்ளவனும் நீயே. யார் என்னென்ன தடைகளை கொண்டு வந்தாலும் உனது சத்திய ஒளியை பூர்த்தி செய்பவனும் நீயே. இறைவனே!!!! எமது தலைமைகளின் முடிவால் தடுமாறியிருக்கும் முஸ்லிம்களுக்கு போதிய இறை பற்றை தந்தருளுவாயாக.
ReplyDeleteஜம்மியத்துல் உலமா முஸ்லிம்கள் ஹலால் உணவு உண்ணுவதை நிறுத்துங்கள் என்று கூறவில்லை. ஹலால் என அவர்களால் வழங்கும் உத்தரவாதத்தையே நிறுத்தியிருக்கிறார்கள். அதனால் சந்தேகத்துக்கிடமான பொருட்களை முஸ்லிம்களாகிய நாம் தவிர்த்து ஹலாலை மாத்திரம் உட்கொள்வோம் என உறுதி எடுப்போம். இன்ஷா அல்லாஹ் இதன் பலனை இறைவன் மிக விரைவில் எமக்கு காட்டுவான். ஆகவே, அதுவரை வரம்பு மீறாதீர்கள். தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுங்கள். அல்லாஹ் அவரவர்களுடைய எண்ணங்களுக்கு கூலியை தருவான்.
HALAL vittu kodukka pattadhu..inimel muslimgal meethi vanmuraii thodarum,,1st ulama sabaii illamal pannuvanga intha govrmnt
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஇலங்கைல் உள்ள முஸ்லிம்களுக்கு ஹலால் தேவையில்லை, மாறாக வெளிநாட்டு ஏற்றுமதிக்கு மட்டும் ஹலால்!!! என்ன முப்தி சொல்றிங்க. உயிருக்கு பயம் இருந்த விட்டுட்டு போங்க. இஸ்லாத்தை விட உங்க நாட்டு பொருளதாரம்தானா முக்கியம்....? உலமா சபை பாரிய அழுத்தங்களுக்கு முகம் கொடுத்ததாக சொன்னிங்களே என்ன அது.
ReplyDeleteஇது சிங்கள நாடு, நாங்க இந்த நாட்டுக்கு கட்டுபர்றோம்.முஸ்லிம்களுக்கு இல்லாத ஹலால் எதுக்குடா வெளிநாட்டு ஏற்றுமதிக்கு மட்டும் இது நம்ம விட்டுகொடுத்த வரலாற்று தவறு. இந்த நால நினைவுல வைத்துக்கொள்ளுங்க. இனி அடிக்கடி விட்டுகொடுக்க வேண்டிவரும்.
அல்லாஹு அக்பர்.
நபி (ஸல்) அவர்களின் அந்த ஈமானிய சிந்தனையை , அவர்களின் பிரார்த்தனையின் சக்தியினை இவர்களோடு ஒப்பிட்டு தான் பார்க்க முடியுமா? இது போன்ற விட்டுக் கொடுப்பினை பலஸ்தீன மக்கள் எடுத்திருந்தால் பலஸ்தீன முஸ்லிம்களை கருவோடு அறுத்திருப்பார்கள். பலஸ்தீன மக்களுக்கு தெரியாதா ஹுதைபியா உடன்படிக்கை பற்றி..எதற்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள் இன்றும்..
ReplyDeleteஇவர்கள் எதை கொண்டு உற்பத்தி செய்தாலும் முஸ்லிம்கள் சாப்பிட வேண்டுமா? நீதி தடம் புரளும் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கலப்புகளை நேர்மையான முறையில் தெரியபடுத்துவார்கள் என எப்படி நம்புவது??
Rizvi Mufti should immediately resign from his position. Not only him but also the entire Halal committee must resign. He repeatedly proved that he doesn't have a back borne and the knowledge to take the right decision.
ReplyDeleteThey have been so reluctant to media since this controversy began. They proved their incapability to provide enough information and to answer immediately whatever the question arose. In ACJU, there wasn't even a single person capable of answering questions raised in Sinhalese. He himself often uses a lot of English words while delivering a speech in Tamil but he too doesn't have fluency in English. I think he does this just to show his colors. In reality he is also extremely poor in explaining things in languages other than Tamil and taking right decisions.
Decisions he and his committee took from day one are completely wrong. They showed their irresponsibility and lack of knowledge. Firstly, he requested the certified manufactures to produce both halal and non halal products. Secondly he requested the Government to take over the certification process. Both decisions were completely wrong. Finally, he has taken another decision which is also completely wrong.
Now the concept of Halal has become a joke among the general public. Muslim general public never requested a halal certification process from them. They were happy with what was available then. He and the ACJU themselves took the decision and introduced the certification process without a request. When the Buddhist monks started to voice against halal ACJU kept silence, only the Muslim general public had to answer and face difficulties.
Now you have introduced the process. There is no point of rolling it back completely just because of the resistance. Take the right decision.
The right solution is to keep the certification process our self and to issue certificates only for Muslim businesses as Halal is an Islamic concept. Then no one can oppose it. Whoever asks it for exporting purposes must pay for that. If the certificate is issued free of charge then it will have value. It will become cheaper.
Don't make valuable Islamic concepts cheaper. Even now it is not too late.
So, Sheik Rizvi Mufti, please take the right decision or immediately resign from your position.
Dear Brother Truewith Proof
ReplyDeleteஉங்களின் மன ஆதங்கம் , வெறுப்பு எல்லாம் புரிகிறது. குரானும், ஹதிஸும் விளக்குவதட்குமுன் மனங்கள் ஒருமித்து , ஒட்டுமையஹா இருக்கவேண்டும்.இல்லையேல் அங்கு பினகுகளும் பிரிவினைககளும்தான் மிஞ்சுமெ தவிர வேறொன்றும் இல்லை.ஆஹஅவே அல்லாஹ்விடம் பாரம் கொடுத்துவிட்டு அமைதியாஹா இருங்கள்.பிரார்த்தனை செய்யுங்கள்.அல்லாஹ் போதுமானவன்.
இலங்கைல் உள்ள முஸ்லிம்களுக்கு ஹலால் தேவையில்லை, மாறாக வெளிநாட்டு ஏற்றுமதிக்கு மட்டும் ஹலால்!!! என்ன முப்தி சொல்றிங்க. உயிருக்கு பயம் இருந்த விட்டுட்டு போங்க. இஸ்லாத்தை விட உங்க நாட்டு பொருளதாரம்தானா முக்கியம்....? உலமா சபை பாரிய அழுத்தங்களுக்கு முகம் கொடுத்ததாக சொன்னிங்களே என்ன அது.
ReplyDeleteஇது சிங்கள நாடு, நாங்க இந்த நாட்டுக்கு கட்டுபர்றோம்.முஸ்லிம்களுக்கு இல்லாத ஹலால் எதுக்குடா வெளிநாட்டு ஏற்றுமதிக்கு மட்டும் இது நம்ம விட்டுகொடுத்த வரலாற்று தவறு. இந்த நால நினைவுல வைத்துக்கொள்ளுங்க. இனி அடிக்கடி விட்டுகொடுக்க வேண்டிவரும்.
அல்லாஹு அக்பர்.
ACUJ SINKALA COMPANEY BUSENESS MUNETRATHUKUKA SAMUKATHIYE KETIKUTA KUTAM.
ReplyDeletehalal only foringners,not for srilanken(ACUJ new fathwa)
brothers listen care fully. He said halal logo is not necessary for local selling items. not halal certificates. and if a company exports it goods to foreign country then halal logo is necessary. dont act like them without understanding the matters properly.
ReplyDeleteNowzarth குர்ஆன் ஹதீஸ விட என்னடா மன ஒத்தும. லூசட நீ.
ReplyDeleteDear brothers!
ReplyDeleteWe agree with the conclusion of withdrawing the HC in order to bring a conclusion to this issue. But, why do you worry about issuing HC for export products? Its not your baby anymore ACJU. Its not your problem anymore. If exporters seek HC to export their products, that's their problem. Let them get it form overseas Halal certificating bodies.
சரி ஹூதைபியா உடன்படிக்கை மாதிரி விட்டுக்கொடுப்போம். அது என்னது இலங்கை முஸ்லிம்களுக்கு ஹலால் இல்லை. ஏற்றுமதிப் பொருட்களுக்கு மாத்திரம் ஹலால் இது எவனுக்கு வக்காளத்து வாங்குவதற்கு? ஹலால் இல்லையென்றால் முழுவதாக விடுவதுதானே. உங்களுக்கு முஸ்லிம்கள் அவசியமில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டும்தான் முக்கியமா?
ReplyDeleteThe authority of ACJU: Please withdraw the halal cert for import market also. Islam is a universal religion and it should be practice in same manner, regardless of where ever they are.While the muslims have no rights to consume halal goods in sri lanka, then why we should help others to earn by imports..
ReplyDeleteDear All,
ReplyDeleteThis is very good time for sri lankan Muslim business men to make your own product in market.
Take it as positive to develop your business with halal way. Then everyone will run back to halal.
Nalla theermanam. Insha Allah muslimkalukke iruthiyil vetri kidaikkum poruttirundu parungal. Vimarsippawarhal naan oru muslim enpathai marandu sonda , iyakka nokkangkalukkaha vimarsippathai thavirndu kollungal.
ReplyDeleteALLAHU AKBAR
அஸ்ஸலாமு அலைக்கும்...
ReplyDeleteஅன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு! ஹலால் தொடர்பாக விட்டுக்கொடுப்பு நம் அனைவரது உள்ளத்தையும் வேகுவாக பதித்துள்ளதை நாம் அறிவோம். அதன் வேளிப்பாடகவே இங்கு பதியப்பட்டுள்ள கருத்துக்கள் அமைகின்றன. எனினும் எமது வார்த்தைப் பிரயோகங்களை கொஞ்சம் நிதானமாக அமைதுக்கொள்வது எல்லோருக்கும் நல்லது என நினைக்கின்றேன். ஹலாலை உண்பவன் அதில் சின்னம் இருக்கிறதா என்று பார்க்க தேவை இல்லை. ஹலால் எது ஹராம் எது என்று மார்க்கம் தெளிவுபடுத்திவிட்டது. ஹலால் சின்னம் இப்பொழுது உருவாகப்பட்டதுதான், 1400 வருடங்களாக சின்னத்தைப் பார்த்தா நமது மூதாதையர் ஹலால் உண்டனர்? உண்மை முஸ்லிம் எங்கு இருந்தாலும் அவன் ஹலால் உண்ணுவான், தவறுதலாக அல்லது நிற்பந்தமாக உண்ணப்பட்டால் அத அல்லாஹ் மன்னிப்பான். உலமாக்களை ஏசிப்பெசுவதன் மூலம் நமது ஈமானை இழந்து விடக்கூடாது. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் பாவமன்னிப்பும் அருள்பாளிப்பும் வழங்குவானாக. ஆமீன்!
ACJU க்கும் RIZVI MUFTHI க்கும் எதிராக கருத்துக்களை கொட்டித்தீர்க்கும் சகோரர்களே ஹுதைபியா உடன்படிக்கை ஞாபகம் இருக்கட்டும்
ReplyDeleteI not belong any religeons group,i am just normal muslim like others.I respected this jamiathul ulama board much after this today desicion i hate this board.This peoples imaan not strong they never want to give up so eassily but they did it.
ReplyDeleteEven please don´t upload this Rizvi mufti jummah also anymore.
ALHAMDULILLAH
ReplyDeleteஜம்மியதுல் உலமா முஸ்லிம் சமூகத்தை பிழையாக வழிநடாத்துகின்றது என்பது மாத்திரமே உண்மை. யாஅல்லாஹ் இத்தகைய பிழையான தலைமைத்துவத்திலிருந்து முஸ்லிம்களை காப்பாற்றுவாயாக!
ReplyDeleteIn my concern,I can't accept this decision of ACJU because here after the sri lankan muslims have to give up their religious rights one by one under the pressure of Bodu Bala Sena and the Government.Where do our Muslim political leaders?Are they dumb?yes,they can't open their mouth for our rights.They strongly argue only for their seat and Ministerial post.They will bow down at Mahinda's feet whatever they need.Every Muslim should condemn this given up of Halal Certification.Otherwise,here after the Bodu Bala sena will target everything to make success of their way.
ReplyDeleteWe can't accept ACJU! Y they want to give halal for export product. If it is not Sri Lankan.
ReplyDeletenext meyanmar is sri lankan muslim
ReplyDeleteAssalamualaikkum. Dear Brothers,
ReplyDeletePlease do not misinterpret the ACJU decision. They have not taken a decision to stop halal certification but only to remove the logo from the products. So the certified products can be informed to society via a directory or e media.
Please see the full media conference in the following link. Please see the following for full media release.
Plese do not meke unnecessary problem. This is a very good decision.
http://www.youtube.com/watch?v=YPjRs20G1as
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=-YAZ87gvJgc
mr sha
ReplyDeleteulamaakkal nabi maarin vaarusu ana solvarhal. anavay mariyathayaha paysavum.(masoora saifavan pathuhakkap paduvaan)ithu hathees. anavay namathu muslim samoohathukku pathuhaappu kidaikkum.INSHA ALLAH.NALLA MUDIVU ALLAHVIDAM IRUNTHU KIDAIKKUM.
WELL DONE The halal certificate for export produces is necessary for the government,and the consumption of non halal produces by local muslims is the demand for the bodu balasena and its sponsors .you have satisfied both party and betrayed entire muslim community.if u all cant serve the community you all should resign from the post.you people have to take the responsibility of consumption of haram produces,untill you hold the ACJU by muslims in srilanka .may Allah guide you properly.
ReplyDeleteஹலால் விடயத்தின் உறுதியாக இருக்கமுடியாத உலமசபய்யின் உபயோகம் என்ன?அரசாங்கத்திக்கு தேவையான தினத்தில் பெருநாளை பிரகடனப்படுத்துவதற்கா?அரசாங்கத்தை கடினமான நிலைமைகளில் இருந்து காட்பதற்கா?இல்லாததொரு சான்றிதழை பாரியதொரு பிரட்சினய்யாக்கி இப்போது அமைதியாக பொறுமையாக இருங்கள் ,துஆ செய்யுங்கள் என்பீர்கலென்ரால் இதை ஆரம்பத்திலே செய்ய இருந்ததே?போதுபலசெனாவை இவ்வளவு பலமிக்க ஒரு இயக்கமாக்கியதே நீங்கள்தானே?இப்போது உங்களது கருத்தின்படி பவுத்த நாட்டின் வாழும் எமக்கு இங்கு கிடைக்கும் அனைத்தும் ஹலாலா?நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில்கொண்டு நாம் ஹராத்தை சாப்பிடலாமா?நாட்டு முஸ்லிம்களின் இன்றைய நிலைமைக்கு யார்போருப்பு?ஆரம்பத்தில் இருந்தே வேற்றிகிடக்காது என்று நன்கறிந்த ஒரு போராட்த்தை இவ்வளவு தூரம் ஏன் இழுத்தடித்தீர்கள் என்பதை மட்டும் தெளிவுபடுத்துங்கள்.
ReplyDeleteஇது மிகப்பெரிய துரோகம் . ஹலால் இல்லையென்றால் யாருக்கும் இல்லாமலிருக்க வேண்டும்.
ReplyDeleteஇலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஹலால் இல்லை. இலங்கையர் அல்லாதவர்களுக்கு மட்டும் ஹலால் முத்திரை வழங்க இவர்கள் யார்.
WELL DONE! The halal certificate for export produces is necessary for the government,and the consumption of haram produces by muslims is the demand for the bodu balasena and its sponsors ,You have satisfied both and betrayed muslims.. You people should take the responsibility of non halal consumption of muslims in srilanka.May Allah guide u properly and forgive you for the sin you have committed.If you cant act as a responsible person you should resign the post you are holding.DO NOT CALL YOUR SELF AS MUFTHI.
ReplyDeleteningal saivathellam chaithu vittu allah vidam poruppai pottu vittal sariya? allah thuyemaiyanevan allah akbar.
ReplyDeleteDear Brother Nowzarth,
ReplyDeleteஸலாம்
குர்ஆனும் ஹதீஸும் இல்லாமல் மனங்கள் ஒத்துமையாக இருந்து என்ன பயன். அப்படியானால் நீங்கள் இங்கே மற்றும் வாழ்ந்துகொண்டிருக்க வந்தவரா? எந்த மார்கத்திலிருந்து எதை பேசுகிறீர்கள்.
இது உங்கள் குற்றமில்லை, இலங்கை ஜமியத்துல் உலமாவின் குற்றம். எதற்க்கு எடுத்தாலும் ஒற்றுமை ஒற்றுமை என மார்கத்தை சரியாக விலங்காதவர்களை கொண்டு முடிவெடுக்கும் கூட்டத்தை நம்பிய உங்களை போன்றவர்கள் இப்படிதான் பேசுவார்கள்.
Risvi Mufthi (ரஸ்வி முவ்த்தீ) இவருக்கு என்ன பள்ளியில் பயான் பன்ன மாத்திரம் தெரிந்தொருவர். உலக கழ்வியில் எப்படி? தனது நாட்டின் வரலாரு எப்படி? நாட்டின் சட்ட திட்டங்கள் எப்படி? அரசியல் சாசனத்தில் எப்படி? civil & criminal சட்டங்கள் எப்படி? எதுவுமே தெரியாத ஒருவரை வைத்து தலைமைதுவத்தை உருவாக்கி என்ன பயன் என்பது இப்போது எல்லோருக்கும் நல்லா விலங்கியிருக்கும்.
போது பல சேனவுக்கு ரிஸ்வி முவ்தி என்ன பிதில்களை கொடத்தார்? அப்படிபட்டவர்களுடுன் எப்படி அவர் வாதிட்டார்? ஆதாரங்களை வைத்து
ஏன் உடணுக்குடண் நிரூபிக்கவில்லை பதில் கொடுக்கவுமில்லை. எதுக்கப்பா அப்படி ஒரு தலைவர்?
எதையெடுத்தாலும் ஒரே சொல் தான்..... ஒற்றுமை.
சரிவர ஹலால் சான்றுதல்களை செய்துவந்திருந்தால் இப்படி நடுங்க தேவையில்லை. எதெட்க்கு எடுத்தாலும் ஜம்மியத்துல் உலமாவிடம் சரியான ஆதாரங்கள் இல்லை. பெயருக்கு தால் தலைவர். வேலைகளில் 00000000000000000000000000000000
இதைதான் இவ்வளவு நாலாகவும் இவர்களிடமிருந்து கற்றவை.
ஹுதைபியா உடன்படிக்கை நினைவுக்கு வருகின்றது.
ReplyDeleteகுப்புற விழுந்தாகி விட்டது – ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லையாம் !!
ReplyDeleteசாப்பிட போவது ஹலால் உணவையா ? ஹலால் சன்றிதலையா?
ReplyDeleteஅரை குறை செய்தி பரிமாற்றத்தால் எல்லோரும் மனம் நொந்து போய் சிலர் அளவுக்கு அதிகமாகவே ஜம்மியத்துல் உலமாவையும் ரிஸ்வி முப்தியையும் சபித்து விட்டார்கள் அவங்க மேல வைத்த அதிகமான நம்பிக்கையும் இதற்கு ஒரு காரணம் எனலாம்
உண்மையில் ஜம்மியத்துல் உலமாவின் முடிவு என்ன??
ஹலால் சான்றிதல் பொறிமுறை வழமை போன்று தொடர்ந்தும் நடைபெறும் ஏற்றுமதி செய்யும் பொருளுக்கு அவசியமாகையால் அவர்கள் பொதிகளில் ஹலால் இலட்சினை பொறிப்பர்கள் இலங்கையில் பொதியிடப்படும் பொருட்களுக்கு ஹலால் இலட்சினை பொறிப்பது உற்பத்தியாளர்களின் விருப்பம்
ஏன் இலவசமாக வழங்க வேண்டும்??
இலங்கையில் விற்கப்படும் பொருட்களுக்கு ஹலால் சான்றிதல் பொறிப்பதை இனவாதிகள் திட்டமிட்டமுறையில் இனங்களுக்கிடையில் சர்ச்சையை தோற்றுவிக்கும் ஒரு விடயமாக பரப்புகிறார்கள்
ஹலால் சான்றிதழை நிராகர்ப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து செல்வதோடு முஸ்லிம்கள் தொடர்பில் துவேச அடிப்படையில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இதனையே முன்னிருத்துகிறனர்
உதாரணமாக ஹலால் சான்றிதழ் மூலம் பெறப்படும் பணத்தினால் பள்ளி கட்டுதல், ஆயுதப்பயிற்சி ................ இப்படியனவை
இப்போ பொருளும் ஹலாலா வேண்டும்? இனவாதிகளுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கணும்? ஹலால் சான்றிதழும் பொறிக்க கூடாது ?
ஆகவே இந்த முறையை ஜம்மியா தெரிவு செய்துள்ளது
அப்போ ஹலால் பொறிமுறையை தொடர்ந்து மேட் கொல்வதட்கான நிதி ??? இப்போ மட்டும் செலவு வராதா? எனறலாம் கேள்வி எழும்பும் ...... ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் நாம் இங்கே நம்மனதில் தோன்றும் எண்ணங்களை எழுதுகிறோம் அப்படி செய்திருக்கனும் இப்படி செய்திருக்கணும் என்று விமர்சிக்கிறோம் ஆனால் எமக்காக எமது சமூகத்திட்காக களத்தில் நின்று செயற்படும் சகோதரர்களை "அவசரப்பட்டு " விமர்சிப்பது ஆரோக்கியமானது அல்ல முஸ்லிம் வியாபாரிகள் இதற்காக முன் வந்திருக்கிறார்கள் இதற்கு ஏற்படும் செலவுகளை அவர்கள் பொருப்பெடுத்திருக்கிரார்கள் அல்ஹம்துலில்லாஹ்
எல்லாம் சரி ஒரு பொருள் ஹலாலா இல்லையா என எப்படி அறிந்து கொல்வது சான்றிதழ் இருக்கும் போது இலகுவாக அடையாளம் கண்டோம் இப்போ ???
இப்பொழுது சந்தையில் ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் குறைந்தது மூன்று மாதங்களுக்கு இருக்கும் அந்நேரத்தில் ஹலால் உணவுப்பொருட்கள் தொடர்பான விபரங்கள்
பள்ளிவாயல்கள் மூலமாகவும் , இணையதளம் , குருஞ்ச்செய்தி மூலமாகவும் (fallow acjuhalaalsl), வேறு சாத்தியமான அனைத்து வழிகள் மூலமாகவும் வழங்கப்படும் என
source: SLBC யில் ரிஸ்வி முப்தியுடனான நேர்காணல்
இதை விமர்சிப்பவர்கள் இப்போ நாட்டுல நடக்குற பிரச்சினைக்கு இதைவிட சிறந்ததொரு தீர்வை முன்வைத்து விட்டு விமர்சியுங்கள்
dears......!
ReplyDeleteInsha allah.
1ம் தீர்மானத்தில் halal பெறும் கம்பனிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும்.
2ம் தீர்மானத்தை பொறுத்தவரை Halal பெற்ற எந்தக்கொம்பனியும் கண்டிப்பாக halal இலட்சினையை போட்டே தீரும்.
3ம் தீர்மானத்தில் நாட்டின் பொருளாதரத்தில் இஸ்லாத்தின் halal பாரிய பங்களிப்பு செய்யும்.
இந்த விஷயத்தில் உண்மையில் யார் வெற்றி பெற்றவர்?
May Allah give more power to ACJU
ReplyDeleteWe ask du'aa for ACJU to grant more health and Strength
ReplyDeleteok good ஆனாலும் ஒரு அச்சம் என்னுள் எழுகிறது!,அதாவது எப்போது பல்டி அடிப்பீர்களோ என்று!,இந்த முடிவிலாவது உறுதியாக இருங்கள் அல்லாஹ் எங்களுடன் இருக்கிறான்.அது மட்டுமல்ல குர்ஆன் ஹதீஸை சொல்வதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் உறுதியுடன் இருப்பீர்களென்றால் அல்லாஹ் எங்களுடன் இருக்கிறான் என்ற உறுதியும்,கம்பீரமும் வந்து சேரும். அத்துடன் உங்கள் பேச்சு அல்லாஹ்வை மட்டும் திருப்திபடுத்தனும் என்ற உள்ளச்சத்துடன் இரப்பின் நீங்கள் மட்டுமல்ல நாங்களும் நம்பிக்கையுடன் பொறுமை காப்பதற்கு துணிகிறோம்.
ReplyDeleteAlhamthulullah, The decisions and the conclusions are correct for the right right time.
ReplyDeleteOur brothers must understand there are Isralian behind this BBS now. They give ideas and supports to BBS to finish Muslims from SriLanka.
சமூகத்தின் உரிமையை தாரைவார்த்துவிட்டு மந்திர விளக்கங்கள் கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம் .
ReplyDeletebe patient people Allah will help us ask dua
ReplyDeletebut ACJU please remove Halaal logo from each and every export products, if we dont need our muslim ummah also dont need sri Lankan products with Halaal or without halaal go to hell Chamber of commerce
Oru samuham thanaithan thiruthatha varai Iraivan Oru Pothum thirunthavaikkamadan
ReplyDelete"Halaal problem mudiyavillai.mulu vadhum neekum varai porattam nadakkum...ulamaakkal aattam thodarndhaal...adakkum murai emakku theriyum-BBS,sec(vk)"
ReplyDeleteITHADKU ACJU ENNA VILAKKAM KODUKKAP POHIRARHAL?
Dear , ஒரு எதிரியை தாக்குவதற்கும், வீழ்த்துவதற்கும், ஒரு சரியான கட்டமைக்கப்பட்ட திட்டம் தேவை. திட்டமிட்டு தாக்குவதென்பது எதிரியை நேருக்கு நேர் தாக்குவது / சுற்றி வளைத்து தாக்குவது / ஆயுதங்களால் தாக்குவது / கருத்துக்களால் வீழ்த்துவது / அவசரமாக வீழ்த்துவது / பொறுத்திருந்து வீழ்த்துவது / எமது வலையில் அவர்களை வீழ்த்துவது / அவர்கள் வலையில் அவர்களையே வீழ்த்துவது , இப்படி நிறைய விடயங்களை ஆராய்ந்து தக்க தருணத்தில் புத்தி சாதுரியமாய் அவசரபடாமல் நிதானமாய் வீழ்த்த வேண்டும் /.
ReplyDeleteஜம்மியத்துல் உலமா சபை எடுத்த முடிவு சரியே / ஜம்மியத்துல் உலமாவையும் முஸ்லிம் மக்களையும் பிரிக்க சதி நடக்கிறது. யாரும் ஏமாந்து விட வேண்டாம்.
ஒரு சமூகத்தை/இனத்தை வீழ்த்தி சின்னாபின்னமாக்கி , அழித்தொழிப்பதற்கு செய்ய வேண்டியது, அச்சமூகத்திலுள்ள 1. பொருளாதரத்தை வீழ்த்துவது 2. அறிவாளிகள், புத்திஜீவிகளை அழிப்பது 3. சமய / மார்க்க போதகர்கள் / உலமாக்களுக்கும் , மக்களுக்கும் இடையிலுள்ள தொடர்பை இல்லாதொழிப்பது 4. அதிகாரமில்லாத சக்தி குறைந்த அறிவிலி அரசியல்வாதிகளை அச்சமூகத்திற்கு பொறுப்பலர்களாக மாற்றுவது 5. அச்சமூகதிட்கு அச்சத்தை ஏற்படுத்தி , வீரமற்றவர்களாக மாற்றுவது. 6. இறைவனுக்கும் ,மக்களுக்கும் இடையில் இடைவெளியை அதிகரிப்பது..
இவைகள் செயல்வடிவம் பெறும்போது அச்சமூகம் இருப்பிடம் தெரியாமல் அழிந்து விடும். இப்போதைக்கு எமது முஸ்லிம்களின் தலைமை பீடம் உலமாக்களும் , புத்தி ஜீவிகளும் நிறைந்த அமைப்பு ஜம்மியத்துல் உலமா சபையும் , ஏனைய இஸ்லாமிய உலமா அமைப்புகளும் மட்டுமே, இவ்வமைப்புகளுக்கு முஸ்லிம்களாகிய நாம் போதிய பலம் சேர்க்க வேண்டும், பிரிந்து நின்று செயற்படாமல், ஒற்றுமையை பற்றிப் பிடிப்போம் அமீன்....
2442. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
2:96 وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَىٰ حَيَاةٍ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا ۚ يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍ وَمَا هُوَ بِمُزَحْزِحِهِ مِنَ الْعَذَابِ أَن يُعَمَّرَ ۗ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ.
2:96. அவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே!) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது; இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான்.