Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களே...! இது உங்களின் கவனத்திற்கு...!!

இந்திய வீட்டுத்திட்டத்தின் 3ம் பாகம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது. குறித்த இந்திய வீட்டுத்திட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் போதியளவு இணைத்துக் கொள்ளப்படவேண்டும் என நாம் நீண்டகாலமாக பல்வேறு கோரிக்கைகளை பல மட்டங்களிலும் முன்வைத்து வருகின்றோம். 

இதற்கமைய இந்திய உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது யாழ்ப்பாண முஸ்லிம்கள் பலர் இந்திய வீட்டுத்திட்டத்திற்காக விண்ணப்பிக்கவில்லை என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது. இதற்கமைய மிகவும் துரிதமாக 1 வார கால அவகாசத்திற்குள் இந்திய வீட்டுத்திட்டத்திற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளும் துரித வேலைத்திட்டமொன்றினை யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் முன்னெடுக்கத் தீர்மானித்திருக்கின்றது.இன்ஷா அல்லாஹ்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு இத்தால் பகிரங்க அழைப்பு விடப்படுகின்றது. 

விண்ணப்பதாரிகள் கொண்டிருக்க வேண்டிய மிக அடிப்படையான தகைமை.

யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவு, சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவு, வேலைனை பிரதேச செயலக பிரிவு ஆகிய மூன்று பிரதேசங்களுள் ஏதேனும் ஒரு பிரிவிற்குள் ஆகக்குறைந்தது 03 பேர்ச் அல்லது 1/3 ஒரு பரப்புக்காணியைக் உரித்தாகக் கொண்டிருக்க வேண்டும்.

இவ்வாறு காணி உரித்தைக்கொண்டவர்கள் உடனடியாக இந்திய வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

1. காணி உறுதி
2. முப்பது வருட தொடர் சுருக்கப் பத்திரம்
3. கட்டிடம் கட்டுவதற்கான மாநகரசபை அனுமதி
4. குடும்ப அட்டை
5. குடும்ப தலைவரின் தே.அ.அ. பிரதி
6. சேதமடைந்த வீட்டின் முன் குடும்ப அங்கத்தினர் அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம்
7. வீடுகட்டி குடியிருப்போம் என்பதற்கான சம்மதக் கடிதம்
8. தாங்கள் முன்னர் குடியிருந்த பிரதேசத்தில் காணியில்லை என்பதை உறுதி செய்யும் கடிதம்
9. கிராம அலுவலரின் சிபாரிசுக் கடிதம்
10. காணி வரைபடம்

மேலே குறிப்பிட்ட ஆவணங்கள் அனைத்தும் இணைக்கப்பட்ட நிலையிலேயே இந்திய வீட்டுத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கையளிக்கப்படவேண்டும். சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விஷேட செயலகம் குறித்த ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதில் விண்ணப்பதாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்புகளைப் பெற்றுத்தரும் என்பதையும் கவனத்தில் கொள்க

மேலதிக விபரங்களுக்கும் தொடர்புகளுக்கும்

யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்
இந்திய வீட்டுத்திட்ட உபசெயலகம்
மஸ்ர உத்தீன் பாடசாலை (புதுப்பள்ளி) வளாகம்
கலீபா அப்துல்காதர் வீதி- முஸ்லிம் வட்டாரம், யாழ்ப்பாணம்

தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:

அஸ்மின்-0770-525391 ஜமால்0774-458582
தாஹிர்0772-405405 நிலாம்0770-512246
ஷர்மிளா0776-674795 - லாபிர் 0775-976619
ஹஸ்ஸான்0779-173686 சுவர்கஹான்0770-476555

விண்ணப்ப முடிவுத்திகதி 17-மார்ச் 2013 (ஞாயிற்றுக்கிழமை)

No comments

Powered by Blogger.