ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு றிஸ்வி முப்தி கடிதம்
(நவமணி) ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமெனக் கோரி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த செவ்வாயன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மகாநாட்டில் அறிவித்ததன்படி ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பினை அரசு ஏற்க வேண்டும் என தாம் அரசா ங்கத்தைக் கோரி இக் கடிதத்தை அனுப்பி வைத்ததாக அஷ்ஷேய்க் ரிஸ்வி முப்தி நவமணிக்குத் தெரிவித்தார்.
ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை அரசு பொறுப்பேற்று, அனைத்து சமூகங்களும் ஏற்கும் விதமான ஒரு முறைமையை மேற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அரசிடம் வேண்டுகோள்விடுத்துள்ளது.
முஸ்லிம்களின் மார்க்கக் கட்டளையான ஹலால் உணவை உண்பதனை உறுதிப்படுத்தும் செயற்பாடாக ஒரு சேவையாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் எந்தவித இலாபமீட்டும் நோக்கமும் காணப்படவில்லை. இதனால் பெறப்படும் பணம் தீய நோக்கங்களுக்காக செலவிடப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றது. 2012 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவுற்ற அ.இ.ஜ.உலமாவின் வரவு செலவு விபரத்தின்படி பெறப்பட்ட 2 மில்லியன் 6 இலட்சத்து 69 ஆயிரத்து 420 ரூபா 80 சதம், ஹலால் சான்றிதழ் செயற்பாட்டை மேம்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இனங்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் ஹலால் சான்றிதழ் தொடர்ந்தும் வாதப் பிரதி வாதங்களை ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்குடனே அ.இ.ஜ.உலமா ஹலால் சான்றிதழ் வழங்கும் முறையை அரசாங்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.

அரசாங்கத்தின் கையில் இருக்கும் என்றால். பன்றி இறைச்சி உட்பட எல்லாவற்றுக்கும் ஹலால் சான்றிதழ் கொடுக்க அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ளன. அங்கு ஊழல் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்பது மறுப்பதற்கு இல்லை.
ReplyDeleteஆசீர்வாதம் வழங்கினீங்கல்லோ. பந்தைப் போட்டாயிற்று. இனி அடிச்சுப் பாருங்கோவன்.
ReplyDelete