இலங்கையிலிருந்து ஈராக் நாட்டிற்கு நேரடி விமானம்
இலங்கைக்கும் ஈராக்கிற்கும் இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இது தொடர்பில் இரு நாடுகளும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈராக்கிற்கு தேயிலை ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. தேயிலை ஏற்றுமதி மற்றும் நேரடி விமானப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இரு நாட்டு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் அண்மையில் ஈராக்கிற்கு விஜயம் செய்து, அந்நாட்டு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் கீரல்லால் ஹசனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கையிடமிருந்து தேயிலையை இறக்குமதி செய்யும் நாடுகளின் வரிசையில் ஈராக் ஐந்தாம் இடத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment