நீ தப்லீக்கா..? இல்லை நான் தௌஹீத். இல்லை.. இல்லை... நான் ஜமாத்தே இஸ்லாமி
(MIFRAAZ SHAHEED (TIANJIN MEDICAL UNIVERSITY - CHINA)
கடந்த பல வருடங்களாக எமது சமூகத்துக்குள் பரவலாகவும் மிகவும் மேலோட்டமாகவும் பேசப்பட்டு வரும் ஒரு விடயம் தான் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் இயக்கங்களின் கூட்டமைப்பு அல்லது இயக்க ஒற்றுமை ஆகும். இதற்கான குரல்கள் சமூகத்தில் பல்வேறு மட்டங்களில் இருந்து அவ்வப்போது எழுப்பப்பட்டு வருவதையும் எழுதப்பட்டு வருவதையும் மிக அண்மைய காலமாக நிறையவே அவதானிக்க முடிகின்றது. ஆனால் குறிப்பிடப்பட்ட எந்த ஒரு மாற்றத்தையும் சமூகத்தில் இன்னுமே அவதானிக்க முடியவில்லை என்பது துரதிஸ்டமே.
இதுவரையும் எழுப்பப்பட்ட குரல்கள் யாவுமே எமது சமூகம் எப்போதாவது அடிவாங்கும் போது அல்லது அடி பட்ட பிறகு ஆங்காங்கே தோன்றி மறைவனவாகவே உள்ளன தவிர நிதானத்துடன் ஏற்பட்ட சிந்தனையாக தோன்றவில்லை. ஏனெனில் இயக்க ஒற்றுமை பற்றி கதைக்கின்ற யாருமே அதற்கான வழிமுறைகளையோ செயர்த்திட்டங்கலையோ முன்வைக்கவில்லை. மாறாக வெறுமனே கோஷங்கள் மட்டுமே எழுப்பப்பட்டு, எமது பிரச்சினை கொஞ்சம் தணிந்த உடன் பழைய குருடி கதவை திறடி என்று ஓய்ந்து விடுகின்றன.
இதைப்பற்றி கொஞ்சம் விரிவாகவும் தெளிவாகவும் எழுத வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இனியும் மூடி மறைத்து அந்த இயக்கம் இந்த இயக்கம் என்று சொல்லாமல் சொல்லிக்காட்டி, குறி ப்புணர்த்திக்கொண்டு இருந்தால் வேலைக்காகாது. இன்றே குறிப்பிட்ட சில விஷயங்களை போட்டுடைக்காவிட்டால் எமது சமூகம் பல கூறுகளாக உடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படப்போவது நிச்சயம்.
சகோதரர்களே!! எம்மத்தியில் காணப்படும் இயக்கங்களை எவ்வாறு ஒன்றிணைப்பது என்ற கேள்விக்கு விடை காண முன் ஏன் இயக்க ஒற்றுமையை ஏற்படுத்த முடியாமல் இருக்கின்றது, ஏன் இன்றளவும் அது ஒரு குதிரை கொம்பாகவே இருந்து வருகின்றது, என்ற கேள்விக்கு விடை காண வேண்டும். இதற்கான சரியான பதில் கிடைத்தால் நாளையே நாம் ஒரு சமூகமாக மாறலாம்.
கடந்த 13 ஆண்டுகளை நாம் எடுத்துப்பார்த்தால் இலங்கையில் இருக்கின்ற எல்லா இயக்கங்களும் பாரிய அளவு வளர்ச்சி அடைந்திருக்கின்றன. ஊடகத்துறையில் பல படிகள் முன்னேறி இருக்கின்றன. சமூக மாற்றத்திலும் தஹ்வா காலத்திலும் பல சாதனைகளை புரிந்திருக்கின்றன. சமூகத்தில் உள்ள படித்த பாமர மட்டங்கள் என்று எல்லா படி நிலைகளில் உள்ளவர்களையும் ஏதோ ஒரு இயக்கத்துக்குள் கவர்ந்து உள்வாங்கியிருக்கின்றன. அதன் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தி இருக்கின்றன.
இதெல்லாம் பல ஆண்டுக்கு முன் ஒவ்வரு இயக்கத்திலும் இருந்த, மிக சொற்ப அளவிலான, இயக்கத்தை உருவாக்கி வளப்படுத்திய அந்த மனிதர்களின் சாதனையாகவே பார்க்கப்படுகின்றது. அவர்கள் உள ரீதியாக பாரிய ஒரு திருப்தியை உணர்கிறார்கள். தாங்கள் இளம் பராயத்தில் இருக்கும் போது வெறுமனே ஒருவர் இருவர் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தற்போது சமூகத்தில் பாரிய ஒரு அங்கமாக உருவேடுத்திருப்பதை பார்த்து மனமகிழ்கிறார்கள் இன்னும் சொல்லப்போனால் அல்லாஹ்வுக்கு நன்றியும் செலுத்துகிறார்கள் அல்லாஹ் அவர்களுக்கு உயரிய கூலியை கொடுப்பானாக
இப்போது விடயத்துக்கு வருவோம் சகோதரர்களே,,
நான் மேலே சொன்னது போன்று ஒவ்வொரு இயக்கத்திலும் மிகவும் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் தான் இன்று இயக்க ஒற்றுமை பற்றி அசமந்தப்போக்கில் இருக்கின்றார்கள். இயக்க ஒற்றுமையை பற்றி ஆழமாக கதைப்பதற்கு மறுக்கின்றார்கள். மேலோட்டமாக எப்போதாவது ஒற்றுமை பற்றி உரையாற்றும் போது புன்முறுவலுடன் ஓரிரண்டு வார்த்தைக்குள் சுருக்கிக்கொள்கிறார்கள்.
ஏனெனில் அவர்கள் அந்த இயக்கத்தை வைத்து தான் சமூகத்தில் அடையாலப்படுத்தபாட்டிருக்கின்றார்கள். அவரா? அவர் அந்த இயக்கத்தில் உள்ள மிகப்பெருமதியானவர் இவரா? இவர் தான் இந்த இயக்கத்தில் தூண் போன்றவர் என்று சமூகத்தின் மனதில் ஆழமாக பதியப்பட்டு இருக்கின்றது. இதை நான் குறை கூறவில்லை, அவர்கள் தஹ்வா களத்தில் பல ஆண்டுகள் தனது வாழ்க்கையை தியாகம் செய்திருக்கலாம். அல்லாஹ்வுக்காக என்று தூய எண்ணத்துடன் பணியாற்றியிருக்கலாம்.
இருந்தும் துரதிஷ்டவசமாக இந்த வட்டத்தை விட்டு அவர்கள் வெளியே வர தயார் இல்லை. தாங்கள் வாழ்நாளில் பார்த்து பார்த்து உருவாக்கிய இயக்கங்கள் சிதறுண்டு போவதற்கு அவர்கள் விரும்புவது இல்லை. அதற்காகத்தான் கருத்து வேறுபாடுகள் பூதாகாரப்படுத்தப்படுகின்றன. அதனால் தான் இயக்கங்கள் தனித்தனியாக சுய கௌரவத்துடன் அவரவர் பாதையில் பயணித்துக்கொண்டு இருக்கின்றன. இதனால் தான் இயக்கங்களை ஒன்றிணைக்க முடியாமல் போயிருக்கின்றன.
இப்போது மிகவும் புத்தி சாதூர்யமாக சிந்திக்க வேண்டும். ஒரு பிரச்சினை வருகின்ற போது அதை முற்றாக அழித்து விட்டு தீர்வு காண்பது சாத்தியம் இல்லாமல் போனால், அதை வைத்துக்கொண்டு சமாளித்துக்கொண்டு மாற்றுத்தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதே சிறந்த ஒரு புத்திசாலிக்கு அடையாளமாகும் இதையே சாதூர்யம் அல்லது சாணக்கியம் என்று சொல்கிறார்கள்.
இப்போது எனது அறிவுக்கு உட்பட்டு ஒரு யோசினையை சொல்கிறேன்,ஆனால் இதுதான் சரி என்று நான் சொல்லவில்லை, சரியாகவும் இருக்கலாம் என்று சொல்கிறேன்.
இப்போது இருக்கின்ற இயக்கங்கள் இயக்கங்களாகவே இருக்கட்டும். உங்கள் இயக்கங்களை விட்டு யாரும் வெளியே வரத்தேவை இல்லை. உங்கள் பாணியிலேயே தஹ்வா செய்யுங்கள். நீங்கள் இதுவரை எப்படி மக்களை அழைத்து நேர்வழிப்படுத்தினீர்களோ அப்படியே தொடருங்கள். உங்கள் இயக்கத்தின் பெயரை அப்படியே வைத்திருங்கள்.
ஆனால் இயக்கங்களின் தலைமைகள் ஒன்று கூடுங்கள். உங்களுக்குள் மனம் விட்டுப்பேசுங்கள். உங்களுக்குள் பொதுவான ஒரு அமைப்பை உருவாக்குங்கள். அதற்கான யாப்பு ஒன்றை உருவாக்குங்கள். அதிலே எக்காரணத்தை கொண்டும் மார்க்க விஷயம் பேசுவதில்லை என்று முடிவெடுங்கள். எக்காரணத்தை கொண்டும் அடுத்த இயக்கத்தை தாக்கி பேசுவதில்லை என்று உறுதி எடுங்கள். சமூகத்தின் முதன்மை நிலை பிரச்சினையை கருத்துப்பரிமாறல் மூலம் கண்டு கொள்ளுங்கள். ஒவ்வொரு தரத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு அதன் தரத்தை அறிந்து முன்னுரிமை கொடுங்கள். நீங்கள் தான் முழு இலங்கை முஸ்லிம்களின் பிரதிநிதி என்று இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அறிவியுங்கள்.
ஒவ்வொரு ஊரிலும் உங்கள் கூட்டு இயக்க அலுவலகங்களை தொடங்குங்கள். அதனூடாக மார்க்கம் தவிந்த செயற்பாடுகளை ஒழுங்கு செய்யுங்கள். பல இயக்கங்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு வேலை திட்டத்தை செய்ய வழி காட்டுங்கள். தவணை முறையில் ஒவ்வொரு இயக்க பள்ளிகளிலோ நிலையங்களிலோ மாதாந்த ஒன்று கூடலை நடத்துங்கள். உங்கள் இயக்கங்களில் தனித்தனியாக இந்த கூட்டு அமைப்பு முறையை பிரச்சாரம் செய்யுங்கள். அதன் தேவையை உங்கள் அடி மட்ட உறுப்பினர்களுக்கு விளக்குங்கள்.
ஒவ்வொரு இயக்கத்தினாலும் மற்ற இயக்கங்களின் வேலைப்பழு குறைந்திருக்கின்றது என்பதை விளக்குங்கள். தப்லிக் ஜமாஅத் இருப்பதனால் வீடு வீடாக சென்று தொழுகைக்கு அழைக்கும் மிக பாரிய வேலை மற்ற இயக்கத்துக்கு இல்லாமல் போய் இருக்கின்றது. தௌஹீத் ஜமாஅத் இருப்பதனால் பித் அத் அற்ற மார்க்கத்தின் தூய வடிவம் சமூகத்துக்கு காட்டப்பட்டுள்ளது, அதன் சுமை மற்ற இயக்கத்துக்கு இல்லாமல் போய் இருக்கின்றது. ஜமாஅத் இஸ்லாமியும் அதனுடன் இணைந்த அமைப்புக்களும் இருப்பதனால் இன்று சர்வதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக திரை மறைவில் என்ன நடக்கின்றது என்று வெளிக்காட்டப்பட்டிருக்கின்றது. இவற்றை எல்லாம் ஒரே ஒரு ஜமாஅத் தனியாக செய்திருந்தால் எமது சமூகம் இப்போது இருக்கும் நிலையை அடைய இன்னும் 30 ஆண்டுகளுக்கு மேல் சென்றிருக்கும். இந்த உண்மையை மக்களுக்கு விளங்கப்படுத்துங்கள்.
தப்லீக்கோ தௌஹீதோ ஜமாஅதே இஸ்லாமியோ எல்லாம் தஹ்வா இற்காக பல்வேறு நபர்கள் கண்டுகொண்ட, தெரிவுசெய்துகொண்ட வழிமுறைகள் என்று விளங்கப்படுத்துங்கள். அவைகள் வழிகேடு அல்ல என்றும் அக்கீதாவில் ஒன்று பட்டது என்றும் புரிய வையுங்கள். உங்கள் பிரச்சாரத்தின் மூலம் எரியும் நெருப்பில் எண்ணையை வார்க்காதீர்கள்.
தேர்தல் வரும் போது யாருக்கு ஓட்டு போடுவது என்று தலைமையை கலந்தாலோசித்து வெளிப்படையாகவே அறிவியுங்கள். கலிமா சொன்ன ஒருவனின் ஓட்டு கூட சிதைந்து போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறுங்கள். அதன் மூலம் சமூக உரிமையை வேன்றேடுங்கள். அரசியல் வாதிகளை உங்களுக்கு கீழால் வழி நடத்துங்கள்.
முஸ்லிம் ஒருவனின் உயிரோ உடைமையோ பறிக்கப்படும் போது அறிக்கை விடாமல் வீதிக்கு இறங்குங்கள். இலங்கை முஸ்லிம்கள் யார் என்று நாட்டுக்கு காட்டுங்கள். கலிமா சொன்னவனுக்கு ஏதேனும் ஒன்னு என்றல் நாட்டை நடாத்தி செல்வது கஷ்டம் என்று அரசாங்கத்துக்கு புரிய வையுங்கள்.
தலைமைகளின் முடிவில் மாற்றம் ஏற்படாத வரை இந்த எந்த ஒன்றுமே நடைபெறப்போவது இல்லை. இயக்கங்களின் தலைவர்களே நீங்கள் மிகப்பெரிய ஒரு சுமையை நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ உங்கள் தலை மீது சுமந்து இருக்குறீர்கள். நீங்கள் ஒவ் வொருவரும் மேய்ப்பாளகள் நாளை மறுமையில் இதைப்பற்றி விசாரிக்கப்படுவீர்கள். (ஹதீத்) உங்கள் போதனையை ஏற்காத ஒரு பாமரன் தப்பித்துக்கொள்வான். இறுதியில் நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள்.
இந்த சிந்தனையை வாசிக்கும் நீங்களும் யோசியுங்கள். உங்கள் நண்பர்களுடன் கருத்து பரிமாறிக்கொள்ளுங்கள். இந்த செய்தியை தேவை கருதி மற்றவர்களுக்கு எத்தி வையுங்கள். சமூக மாற்றத்தில் நீங்களும் ஒரு பங்குதாரர் ஆகுங்கள். எல்லாம் தானாகவே நடக்கும் வரை எதிர் பார்த்திருக்காதீர்கள்.
தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக்கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான் (13:11)

அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteசகோதரரே, இன்று நீங்கள சொல்லும் ”இன்றே குறிப்பிட்ட சில விஷயங்களை போட்டுடைக்காவிட்டால் எமது சமூகம் பல கூறுகளாக உடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படப்போவது நிச்சயம்.” என்று. உங்களுக்கு பட்ட அல்லது தெரிந்த இந்த விடயத்தை போட்டுடைக்கவேண்டுமென்று சொன்னீர்கள். ஆனால் அன்று கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தவ்ஹீத் ஜமாத் பல விசயங்களை மக்கள் மத்தியில் போட்டுடைக்கும் போது அதை எதிர்த்தவர்கள் தான் அதிகம். உங்களுக்கு இப்போதாவது இது போட்டுடைக்க வேண்டிய ஒன்று என புரிந்தது மிக்க மகிழ்ச்சியான ஒரு விடயம்.
தவ்ஹீத் ஜமாத்தை சரியாக புரியாமல் இந்த கருத்தை வைத்துள்ளீர்கள் என்று என்னுகிறேன்.
”ஒவ்வொரு இயக்கத்திலும் மிகவும் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் தான் இன்று இயக்க ஒற்றுமை பற்றி அசமந்தப்போக்கில் இருக்கின்றார்கள். இயக்க ஒற்றுமையை பற்றி ஆழமாக கதைப்பதற்கு மறுக்கின்றார்கள். மேலோட்டமாக எப்போதாவது ஒற்றுமை பற்றி உரையாற்றும் போது புன்முறுவலுடன் ஓரிரண்டு வார்த்தைக்குள் சுருக்கிக்கொள்கிறார்கள்.”
ஏன் என்றால் தவ்ஹீத் ஜமாத் தான் இன்றுவரை அனைத்து ஜமாதுகளையும் அலைக்கிரது அல்குர்ஆன் அஸ்ஸுன்னா மற்றும் தான் மார்க்கம் மற்றவைகளை எரிந்து விட்டு அவ்விரண்டின் பால் மட்டும் ஒன்றுதிரல. மற்றும் இவர்கள் மிகவும் அதிகமாக ஒற்றுமை எப்படி என்பதை மக்கள் மத்தியில் விலக்கிகொணடிருப்பவர்கள்.
யாஅல்லாஹ் எம் அனைவரையும் நீ அருளிய ஒற்றுமையின் பக்கம் மாத்திரம் திரும்பக் கூடிய கூட்டத்தில் இனைப்பாயாக!
மாஷா அல்லாஹ் .மிகவும் நல்ல யோசினைதான் .அனால் நாட்டில் இவ்வளவு பிரச்சினைகளும் நடந்துகொண்டிருக்கும் போதும் யாருமே நாம் பொது விடயத்துக்காக ஒன்றுபட வேண்டும்,முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் நாட்டில் இனவாதிகளுக்கு எதிராக ஒன்றினைவோம் என்று எந்த ஒரு இயக்கமுமே இன்னும் முன்வரவில்லைதான்.அரசியல் வாதிகள் கூட தனது சுய லாபாத்துக்காக சொரம்போயுள்ளனர் என்றுதான் கூற வேண்டும்.ஒன்ரினைவார்கால?பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூற முடியாது உடனடியாக காலத்தில் இறங்க வேண்டிய தருணம்.புத்திஜீவிகள் முன்வரவும்.அல்லாஹ் துணை நிற்பான் என்று நம்புவோம்.இந்தியாவில் 23 அமைப்புகள் அண்மையில் ஒன்றிணைந்தது எம்மெல்லோருக்கும் நன்றாக தெரிந்த ஒரு விடயமே எனவே நாமும் முயல்வோம்.
ReplyDeletemasha allah.
ReplyDelete"thawheed jamathai puriyamal inda karuthai vaithullirhal"
brother, neengal nenjil thakbir kattumpothu nenjai thottu kelungal
"nan matra iyakkangalai patri eavvalavu therindu vaithirukkiren"
eandru appodu puriyum. oruvar otrumaiyin pakkam alikurar anda alaipitkana pathila idu?...
அல்ஹம்துலில்லாஹ் இந்த நல்ல யோசினையை எழுதியதற்க்கு அல்லாஹ் நற்கூலி தருவான்.இப்போதும் எங்கள் சகோதரர்கள் என்னுடைய இயக்கம் பெரிது என்ற தோரனையில் தான் விமர்சனக்களை எழுதுறாங்க.ஒரு காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தான் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்கும் இயக்கமாக இருந்தது ஆனால்
ReplyDeleteஅரசியல்வாதிகளை நம்ப முடியாது.முஸ்லிம் இயக்க தலைவர்கள் எல்லோரும் ஒன்று
சேர்ந்து நீங்கள் எழுதியது போல் அல்லது ஒரு மாற்று கருத்துடன் ஒன்று சேர்வது காலத்தின்
முக்கியம்,இல்லையேல் நீங்கள் எழுதிய அத்தனை அம்சங்களுடன் ஒரு புதிய இயக்கத்தை
உருவாக்க வேண்டும்.
மாஷா அல்லா முதலில் எந்த அமைப்பு முன் வருகிறது என்று பார்ப்போம் . எது முன் வருகிறதோ அது தான் இந்த நட்டு முஸ்லிம்களின் நலனை கருத்தில் கொள்கிறது எனலாம். இந்த அமைப்பாவது நம் முஸ்லிம் அமைச்சர்களுக்கு கட்டுப்படாமல் சுயமஹா மக்கள் நலனை மாத்திரம் கருத்தில் கொண்டு செயல் பட இறைவனை பிரார்த்திப்போமாக.
ReplyDeleteAlhamdulillah, this is what we want to pass the massage to our community. Lets unite, based on Quran and sunnah. rather than Thableeq or thawheed or Jamath-e-Islami. Lets go for an integration,lets build unique identity. Lets educate the community to win the challenges.
ReplyDeleteI am sure, future for Muslims.
Insha allah.
@ True with proof
ReplyDelete25வருடங்கள் அல்ல 65 வருடங்கள். ஆனால் அதற்கு முன்னரும் இஸ்லாத்தின் மூலாதாரமாக குர் ஆனையும், ஹதீஸையும் மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கை இருந்தது.
கொள்கை ரீதியான கருத்து வேறுபாடு என்பது அவரர் சுதந்திரம். ஆனால் சமுதாயம் எனும்போது பிரச்சினைகள் வரும் போது மாத்திரம் அல்ல அன்றாட வாழ்விலும் இந்த ஒற்றுமை அவசியம். ஆனால் சில புல்லுருவிகள் சமுதாயத்துக்குள் இருந்து கொண்டு இன்றைய குழப்பமான சூழலில் அதைப் பயன்படுத்தி, எதிரிகளுக்கு நமது சமுதாயத்தைக் காட்டிக் கொடுக்கும் ஈனச் செயலைச் செய்கிறார்கள். இவ்வினப் பிரச்சினையில் மீன்பிடிக்கும் இவர்கள், இதன் விளைவு அவர்களையும் சேர்த்து தான் தாள வைக்கும் என்பதை புரிந்து கொள்வதாய்த் தெரியவில்லை.. நமது ஒற்றுமை தான் நமது இருப்பு, எதிகாலம், பாதுகாப்பு. இதை கருத்து வேறுபாடுகளுடன் குழப்பி, குழப்பத்தை விளைவிப்பவர்கள் தற்பொழுதாவது புரிந்து கொண்டு சமூக ஒற்றுமை மேலோங்க உழைக்க வேண்டும்.