முபாறக் மௌலவியின் வேதனை...!
சமூகத்தின் உயர் மட்டம் தவறு செய்யும் போது அவற்றை கண்டுகொள்ளாமலும் சாமாண்ய மக்கள் தவறு செய்யும் போது அதனை கண்டிப்பவர்களாக யூத நசாராக்கள் இருந்ததாக அல்குர்ஆன் குறிப்பிடுவது போன்றே முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் மகளது திருமணம் கோடிக்;கனக்கான ரூபாய் செலவில் நடந்ததை கண்டிக்காத இஸ்லாமிய அமைப்புக்களின் மௌனம்; உள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சி குறிப்பிட்டுள்ளது.
இது பற்றி அக்கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
அண்மையில் பெய்த அடைமழையினால் உணவு கூட இல்லாமல் கிழக்கு மாகாண விவசாயிகள் கடனாளிகளாக தத்தளிக்கும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் புத்திரியின் திருமணம் கொழும்பு ஆடம்பர ஹோட்டலில் நடைபெற்றுள்ளது. இந்த ஹோட்டலில் ஒருவரின் உணவுக்கு ரூபா ஐயாயிரத்துக்கு மேல் அறவிடப்படுகிறது. சுமார் இரண்டாயிரம் பேர் இந்த ஆடம்பர திருமணத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய, மக்கள் வாக்கு பெற்ற ஒரு தலைவரின் இந்நடவடிக்கையை இந்த நாட்டின் தப்லீக், தவ்ஹீத் சுன்னத் போன்ற எந்த ஜமாஅத்தும் கண்டிக்காததன் மூலம் இத்தகைய ஆடம்பர திருமணத்தை இவர்கள் ஆதரிப்பதாகவே கருத முடிகிறது. குறிப்பாக திருமணங்கள் எளிய முறையில் இருப்பதே நபிவழி என என கடுமையாக வலியுறுத்தி வரும் தவ்ஹீத் சகோதரர்கள் கூட மௌனமாக இருப்பது அல்லாஹ்வை விட அரசியல் தலைவர்களே அச்சப்பட தகுதியுள்ளவர்கள் என்ற இணைவைப்பிலா என்று புரியவில்லை.
இதே திருமணத்தை ஒரு சாதாரண பணக்கார முஸ்லிம் செய்திருந்தால் இந்நேரம் இந்த ஜமாஅத்துக்களின் பள்ளிவாயல் மிம்பர்களில் குய்யோ முறையோ என புலம்பித்தள்ளியிருப்பார்கள். ஆனால் தாங்கள் பலர் ஆதரவளிக்கும் கட்சித்தலைமை இவ்வாறு நடந்து கொண்ட போது அமைதி காப்பது என்பது தமது தலைவர்களுக்கு வேறு சட்டமும் சாமாண்யர்களுக்கு வேறு சட்டமும் கடைப்பிடித்ததாலேயே யூத நசாராக்கள் இறைவனால் சபிக்கப்பட்டார்கள் என்ற குர்ஆன் வார்த்தையை நமக்கு நினைவு படுத்துகிறது.
அதே போல் ஒரு தடவைக்கு மேல் உம்றா செய்வதை விடுத்து அவற்றை ஏழைகளுக்கு வழங்கினால் றிசானா போன்ற பெண்கள் வெளிநாடு போவதை தடுக்கலாமே என பெரிதாக எழுதும் எமது எழுத்தாளர்களும்; கவிஞர்களும், ஊடகவியலாளர்களும், புத்திஜீவிகளும் கூட கோடி ரூபா செலவழித்து நடத்தப்பட்ட இந்தத் திருமணத்தை பகிரங்கமாக கண்டிக்க முன்வரவில்லை. ஒருவர் ஒரு உம்ரா செய்வதாயின் சுமார் ஒரு லட்சம் ரூபாவே செலவாகும். ஐந்து உம்ரா செய்தால் ஐந்து லட்சமே செலவாகும். இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதல்ல. ஆனாலும் அதை விட ஓர் ஏழையை வாழ வைத்தால் அதைவிட நன்மை கிடைக்கும் என்பது உண்மை. அதே போல் மேற்படி ஆடம்பர திருமணத்தை எளிய முறையில் நடத்தியிருந்தால் நூறு றிசானாக்களைவ வாழ வைத்திருக்க முடியும்.
ஆகவே தலைவர்கள் தவறு செய்யும் போது மௌனம் காப்பதும் சாமாணியர்கள் தவறு செய்யும் போது வெளுத்து வாங்குவதுமான இஸ்லாமிய ஜமாஅத்துக்களின் செயல் நிச்சயம் இறை தண்டனைக்குரியதாகும் என்பதை மிகத்தெளிவாக சொல்கின்றோம்.
well said
ReplyDeleteமுபாரக் ஷாப்.., அவர் அரசியல் செய்வதே, இப்படியான ஆடம்பரமான வாழ்கைகுத்தானே...,
ReplyDeleteதயவு செய்து காங்கிரஸ் தொண்டர்களும், முஸ்லிம் மக்களும் சிந்த்தியுங்கள்...!!! ஈமானின் பலஹீனம், மனத்தால் வெறுப்பது..!!!
''உண்ணுங்கள்; பருகுங்கள்; வீண் விரயம் செய்யாதீர்கள்.'' என்பது அல் குர்ஆனின் கட்டளை. சமூகத்திற்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய தலைவர்களே ஆடம்பரமாகத் திருமண வைபவங்களை நடாத்துவது வேதனைதான்.
ReplyDeleteஅது ஒரு புறமிருக்க...கண்ணியத்துக்குரிய முபாரக் மௌலவி அவர்களிடம் ஒரு கேள்வி...
பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் சிவப்பு நிறத்தில் தொப்பி போட்டிருக்கிறார்களா...? அல்லது சிவப்பு நிறத்தில் தொப்பி போடுவதை அங்கீகரித்தாவது இருக்கிறார்களா..?
இந்தக் கேள்வியில் எந்த உள் நோக்கமும் இல்லை. அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில்தான் கேட்டுள்ளேன்.
அது சரி, கட்டுரை எழுதுபவர்கள் (அதுவும் மௌலவி) எதற்காக தமது புகைப்படத்தை பிரசுரிக்க விரும்புகிறார்கள்? இது நபி வழியோ!!! இதில் பெருமை இல்லையா? இதில் உள்ள இஹ்லாஸ், மறுமை நோக்கம் என்ன? உங்கள் வாதம் இஸ்லாமியப் பாணியில், தேவையில் இருந்திருந்தால் நாங்கள் வரவேற்றிருப்போம். ஆனால் இதில் அரசியல் வாடை அடிக்கிறது. அல்லாஹ் மிக அறிந்தவன், ஒரு ஆத்மா மறைத்திருப்பதையும், வெளிப்படுத்துவதையும் மிக அறிந்தவன். நம் அளவுக்குத் தான் அவனுக்கும் அறிவு இருப்பதாய் நமது சமூகம் நினைப்பது அல்லாஹ்வைப் பற்றிய அறிவில் உள்ள குறைபாடே!!
ReplyDeleteஇஸ்லாமிய உணர்வும் பற்றும் ,ஈமானின் பூரணமும் தக்வா என்ற இறைக்கண்காணிப்புப்பீதியும் உள்ளவர்களுக்கு, மாத்திரமே உரித்தானதாகும் .ஆக,இஸ்றாப் அல்லது தப்தீர் என்று அல்-குர் ஆன் குறிப்பிடும், அதே நேரம் எச்சரிக்கும் வீன்விரயம் பற்றி தனது வாழ்வில் நடை முறை ரீதியாக சிந்தித்து தவிர்ந்து நடப்பவர், மேற் சொன்ன பண்புடையவர் ஆவார். வீண்விரயம் செய்யாதீர்கள் நிச்சயமாக அவன் வீன் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை(06-142) நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தான்களின் சகோதரர்கள் ஆவார்கள்.(17-28) எனினும்இதை இஸ்லாம் அல்லாத, அரசியல், பொருளாதார கலாச்சார துரை சார்ந்தவர்களிடம் எதிபார்ப்பது சமயோகிதப்பொருத்தமற்ற ஒன்றாகும்.எனினும் இங்கு நோக்கத்தக்க விடயம் யாதெனில்:இஸ்லாத்தின் பெயரால் (இஸ்லாம் அல்லாத அரசியலாக இருந்தாலும்) முஸ்லிம்களின் அரசியல் ஆணையோடு அரசியல் களத்தில் இருப்பவர்கள் விரும்பியோ விரும்பாமலோ தமது லௌகீகம் சார்ந்த விடயங்களை,ஷரீஆவிற்குட்பட்டதாக ஆக்கிக்கொள்வது அவசியமாகின்றது.இது காலத்தின் தேவையும் கூட.இஸ்லாதைப்பற்றி தவறான கருத்துக்கள் பரவலாக அலைமோதும் இக்கால கட்டத்தில் இஸ்லாமியத்தின் பெயர் தாங்கி ,தேசிய ,சர்வதேச மட்டத்தில் உலாவருபவர்கள் இஸ்லாத்தின் முன்மாதிரியாக தனது சொல் செயல் சார்ந்த விடையங்களைஆக்கிக்கொள்வதுஅவசியமாகும்.உளப்பரிசுத்தத்தோடு இவ்வாறு செயற் பட்டால் பாரிய அளவிலாலான தஃவாவாகவும் இது கருதப்படும்.ஆனால் இங்கு கவனிக்க வேண்டுய முக்கிய விடயம்;இஸ்லாம் தனி மனித சுதந்திரத்தை அவனின் நிலையைக்கருத்திற்கொண்டு ஆதரிக்கின்றது.இங்கு குறிப்பிடப்படுகின்ற திருமணவிடயத்தைப்பொறுத்த வரையில்திரு மணத்திற்காக மக்களை அழைப்பதும் விருந்து படைப்பதும், ஆகுமாக்கப்பட்ட விடயங்களே.அழைக்கப்பட்டவிருந்தினர்கள் மணமக்களை வாழ்த்துவதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவையே.இங்கு செய்யப்பட்ட செலவுகள் வீண்விரையம் என்றும் நாம் உறுதியாகக்கூறமுடியாது.ஏனெனில்இங்கு குறிப்பிடப்பட்டவர்,ஒரு பிரபல்யம்வாய்ந்தவர்.அவரின் நிலையைககருத்திட்கொள்ளும்போது, அவரின் திரு மண நடைமுறைகள் வீண்விரையம் என்ற வரையறைக்குளிடம்பெறமாட்டாது என்பதுஎனது தாழ்வான கருத்தாகும்.மேலும் ஒரு மனிதனின் மானம் என்பது எல்லோராலும் பாது காக்கப்படவேண்டிய ஒன்றாகும்.ஒரு முஸ்லிமின் மானம் இரத்தம்,பொருளாதாரம் என்பன மற்ற முஸ்லிமுக்கு ஹாறாமாகும் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.அதிலும் முக்கியமாக தலைமைதுவக் கோதாவில் இருப்பவர்களை கௌரவிக்கவேண்டியது,இஸ்லாத்தில் முன் மாதிரியாக்கப்பட்ட விடையமொன்றாகும்.மக்கா வெற்றியின் போது காபிறான தலைவர் அபூசுஃப்யானுக்கு நபியவர்கள் கண்ணியமளித்த வரலாறு இருக்கிறது,அதற்காக இவர்தான் எம்தானத்தலைவர் .இவர் செய்ததெல்லாம் சரி என்று நான் கூறவில்லை.அவரின் நிலையைக்கருத்திற்கொள்ள வேண்டும்.அணுகப்பப்படவேண்டியவிடையங்களை மாத்திரமே வெளிக்கொணர வேண்டும்.ஒரு மனிதனின் தனிப்பட்ட விடையங்களை மறைக்கவேண்டிய கடப்பாடுள்ள ஒருவர் தன் சொந்த நலனுக்காக மற்ற ஒரு முஸ்லிமின் செயலை குறையாக சித்தரிப்பது வேதனையான விடயமாகும்.
ReplyDeleteஇஸ்லாமிய சட்டங்கள் பணம் உள்ளவனுக்கு ஒரு மாதிரியாகவும் பணம் இல்லாதவனுக்கு வேறு மாதிரியாகவும் கற்பிக்கப் படுவதாக சொல்லப்படும் குற்றசாட்டுகள் பற்றிய கருத்துக்களை சொன்னால் வரவேற்கலாம்அஹ்மதி நஜாத் (ஈரான்).தனது மகளின் திருமணத்தின் பொது எடுத்த போட்டோக்களை பார்த்து அவரின் எளிமையை பரட்டியவர்களும் உண்டு..
ReplyDeleteHALO MR.CARREEMM............ ENNA ANTHA KALIYAANATHTHUKKU POI NALLA THINDUTHTHU VANTHAYALO ? INTHA JAALRA ADIKKIYAL?? ....SEE .........VETKAMAAKA ILLAYAA ?
ReplyDeleteMUBARAK MWALAIV SAID THE TRUE ISLAMIC TEACHINGS....... THE PORK AND SAARAAYAM , WISKEY ALL BRANDS ARE THERE IN THE HOTEL......HOW THESE LABEL MUSLIMS GO AND HAVE FUNCTIONS? / DONT SAY SEPERATED .
Please brothers,
ReplyDeleteLets consider ourselves Allah will wish and accept the comments before we leave them to public.