2014ம் ஆண்டு உலககோப்பை கால்பந்து போட்டி கனவு தகர்ந்தது..!
பிரேசிலில் உள்ள பிளமங்கோ கிளப் கால்பந்து அணியின் கேப்டன் மற்றும் கோல் கீப்பராக இருப்பவர் புரூனோ பெர்னாண்டஸ் டிசோசா (27). இவர் 2014ம் ஆண்டு உலககோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணியில் இடம்பிடிக்கும் விதமாக உள்ளூர் அளவிலான போட்டிகளில் கவனம் செலுத்தி வந்தார். பிரபல மாடல் அழகியான எலிசா சமூடியோ (25) என்பவரை புரூனோ காதலித்து வந்தார். இதன் காரணமாக அவர் கர்ப்பமானார்.ஆனால் இதற்கு தான் காரணமில்லை என புரூனோ, எலிசாவிடம் தகராறு செய்து வந்தார். இதன் காரணமாக இருவரும் பிரிந்தனர். சில மாதங்களில் எலிசாவிற்கு குழந்தை பிறந்தது. தொடர்ந்து அந்த குழந்தை புரூனோவிற்கு தான் பிறந்தது என்பதை நிரூபிக்க எலிசா, டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தார்.
இதில் குழந்தையின் தந்தை புரூனோ என்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. குழந்தையை வளர்ப்பதற்காக புரூனோவிடம் எலிசா பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு கூலி ஆட்களை வைத்து ஏவி எலிசாவை புரூனோ கடத்தினார். பின்னர் அவரை சித்ரவதை செய்து துண்டு துண்டாக வெட்டி கொன்றுள்ளனர். அவரது உடலின் பாகங்களை நாய்க்கு வீசி எறிந்துள்ளனர். மீதியை தீவைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு எரித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் புரூனோவை கைது செய்தனர். முதலில் கொலை குற்றத்தை மறுத்த அவர் பின்னர் ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் ரியோடிஜெனிரோ நீதிமன்றம் புரூனோவிற்கு 22 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.

@jaffna muslim
ReplyDeleteஎலிசாவின் புகைப் படத்தைப் பார்த்துத் தான் நாங்கள் இந்த செய்தியை அறிய வேண்டும் என்றால் இந்தச் செய்தி தேவை இல்லை. jaffna muslim இன் மதிப்பு கருதி இது போன்ற புகைப்படங்களை பிரசுரிக்காமல் தவிர்ப்பது நல்லது.