ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முஸ்லிம்கள் விடயத்தில் கவனம் செலுத்தும் - அமைச்சர் நிமால்
(மொஹமட் பாயிஸ்)
ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சி பதுளை மாவட்ட முஸ்லிம் இளைஞர் கிளை அங்குராபண நிகழ்வு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் பதுளை லு.ஆ.ஆ.யு கேட்போர் கூடத்தில் சனி இரவு இடம்பெற்றது. இதன்போது நடப்பாண்டிற்கான புதிய நிர்வாகக் குழு தெரிவு இடம்பெற்றது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இங்கு உரையாற்றும் போது,
முஸ்லிம்களும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் நீண்ட உறவு இருக்கின்றது, அதற்கமைய எமது கட்சி முஸ்லிம்கள் விடயத்தில் கூடிய கவனம் செலுத்தும் அந்த வகையில் நாடாளுமன்றில் பேசப்பட்ட ஹலால் விடயம் தொடர்பாகவும் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கருத்துக்களை தெரிவித்துள்ளேன். எதிர்காலத்தில் பதுளை மாவட்ட முஸ்லிம்களை பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.


அவங்கவங்க சந்தர்ப்பங்களூக்கு ஏற்றாற்போல பேசிவிட்டுபோறாங்க் சுயனலவாதிகள்,
ReplyDelete